சனி, 14 செப்டம்பர், 2019

#466 - இந்த வசனத்தில் குறிப்பிட்டிருக்கிற இயேசு யார்? கர்த்தர் யார்? விளக்கவும்.. ஒருவனும் நீர் யார் என்று கேட்கத்துணியவில்லை ஏன் ???

#466  - *இந்த வசனத்தில் குறிப்பிட்டிருக்கிற இயேசு யார்? கர்த்தர் யார்?*  விளக்கவும்.. ஒருவனும் நீர் யார் என்று கேட்கத்துணியவில்லை  ஏன் ???
 
யோவான் 21: 12 இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஜனம்பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை.

இந்த வசனத்தில் குறிப்பிட்டிருக்கிற இயேசு யார்? கர்த்தர் யார்?  விளக்கவும்.. ஒருவனும் நீர் யார் என்று கேட்கத்துணியவில்லை ஏன்?

*பதில்* :
பிதாவாகிய தேவன் - மரியாள் வயிற்றில் பிறந்த இந்த இயேசுவையே ஆண்டவரும் கிறிஸ்துவும் கர்த்தரும் ஆக்கினார் (அப். 2:36, பிலி. 2:11)

இயேசு என்று இந்த வசனத்தில் வருவது எனக்காகவும் பாடுபட்டு சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடெழுந்த அந்த இயேசுவே அது (யோ. 21:12 அறிந்தபடியினால் )

அவரே கர்த்தர் கர்த்த்ர் என்றால் ஆண்டவர், எல்லா அதிகாரமும் படைத்தவர்.

அவர் யார் என்று *ஏற்கனவே அவர்கள் அறிந்தபடியினால் கேட்கத்துணியவில்லை* என்று வசனமே சொல்கிறது (யோ. 21:12)

கேட்கதுணியாதது இந்த இடத்தில் மாத்திரம் அல்ல இதற்கு முன்பும் இந்த பயம் அவர்களிடத்தில் இருந்தது (யோ. 4:27, 16:19;  மாற்கு 9:32; லூக். 9:45)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக