வியாழன், 12 செப்டம்பர், 2019

#456 - 1இரா. 18:38 What is the meaning of விறகு, கல், மண், தண்ணீர். ஆவிகுறிய அர்த்தம் வேத ஆதாரத்துடன் ஐயா.

#456 -  *What is the meaning of விறகு, கல், மண், தண்ணீர். ஆவிகுறிய அர்த்தம் வேத ஆதாரத்துடன் ஐயா- .

அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.  1 இரா. 18:38

*பதில்* :
இன்றிலிருந்து ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்த இடம் கர்மேல் பர்வதம் (1இரா. 18:20).

இஸ்ரேல் நாட்டில் கர்மேல் மலையில் அர்மகதோன் என்ற பள்ளத்தாக்குக்கு அருகாமையில் ஒரு இடத்தை பத்திரப்படுத்தி அங்கு தான் எலியா இந்த காரியத்தை நிகழ்த்தினார் என்று எழுதி வைத்த இடத்தை 3 வருடங்களுக்கு முன்னர் நேரடியாக பார்க்க எனக்கு தேவன் கிருபை பாராட்டினார்.

பிரசங்கத்தின் அழகிற்காகவும் கேட்பவர்களின் ஆர்வத்தை தூண்டவும் தங்கள் திறமையை கேட்பவர்கள் மத்தியில் நிலைநாட்டவும் சில வசனங்களை பலூன் போல ஊதி அதற்கு கை கால் மூக்கு எல்லாம் வைத்து உற்சாக படுத்தி இது தான் ஆவிக்குறிய அர்த்தம் என்று எதையாவது வேத ஆதாரம் இல்லாமல் சொல்லி விடும் பழக்கம் அநேகருக்கு உண்டு.

எந்த தகவலையும் வேதத்தில் ஆதாரம் இல்லாமல் நமக்கு இஷ்டப்பட்டது போல யூகிப்பதற்கு வேதத்தில் நமக்கு இடமில்லாததால் (1கொரி. 4:6) இந்த பத்தியில் நாம் படிக்கும் பலி - சம்பவம் நடந்த இடத்தில் உபயோகப்படுத்தப்பட்ட கல் மண் தண்ணீர் விறகு எல்லாம் அந்த நேரத்தில் ஒப்பனையாக அல்ல - உண்மையாகவே இந்த பொருள்களை வைத்து தான் பலி செலுத்தினார்கள் என்பதோடு நாம் புரிந்து கொள்வது உத்தமம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக