#417 *கேள்வி* இயேசு கிறிஸ்து எந்த நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்?
யோவான் மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானம் கொடுத்து வந்தாரே – அப்படியென்றால் இயேசு கிறிஸ்து பாவத்திலிருந்து மனம்திரும்ப ஞானஸ்நானம் எடுத்தாரா? விளக்கவும்
*பதில்* :
யோவான் ஸ்நானன் - பாவமன்னிப்புக்கென்று *மனந்திரும்புதலுக்கேற்ற* ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான். லூக்கா 3:6
ஜனங்கள், இயேசுவை விசுவாசிக்கும்படியாக மனந்திரும்ப வேண்டும் என்று யோவான்ஸ்நானன் *மனந்திரும்புதலுக்கென்று ஞானஸ்நானம் கொடுத்தார்* (அப். 19:4)
இயேசு, தன்னை தானே விசுவாசிக்க வேண்டிய அவசியமில்லை.
அவரின் அடிச்சுவடுகளை பின்பற்றும்படி, கிறிஸ்துவானவர், *நமக்கு* மாதிரியாக நடந்தார் (1பேதுரு 2:21).
அவர் ஞானஸ்நானம் எடுத்து கொண்ட நோக்கம் விசுவாசிக்கும்படியாக அல்ல, *நீதியை நிறைவேற்றும்படி* எடுத்தார். (மத் 3:15)
பாவமன்னிப்புக்காகவோ, மனந்திரும்புதலுக்காகவோ, அவர் எடுக்கவேண்டிய அவசியமில்லை (1பேதுரு. 2:22)
ஒனாமா என்ற கிரேக்க வார்த்தைக்கு ”அதிகாரம்” என்பது தமிழ் அர்த்தம்.
நாமம் என்பது கட்டளை (அ) அதிகாரம். (மத். 28:19)
மாம்சத்தில் வந்த தேவன் (1தீமோ. 3:16) தனக்கு தானே அதிகாரம் பெற்றுக்கொள்ள அவசியமில்லை.
மேலும், பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுங்கள் என்று சொல்லப்பட்டது – சிலுவை மரணத்தினின்று உயிர்த்தெழுந்த பின்னரே (மத். 28:18-19)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக