ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

#405 - பாவ அறிக்கை செய்ய வேண்டுமா?

#405 - *பாவ அறிக்கை செய்ய வேண்டுமா?*
எப்படி செய்ய வேண்டும்? யாரிடம் செய்ய வேண்டும்? மனிதர்களிடம் பாவ அறிக்கை செய்யலாமா?

*பதில்* :
1) *ஞானஸ்நானத்திற்கு முன்பு*:
பரிசேயர்கள் யோவானிடத்தில் வந்து தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டார்கள் (மாற்கு 1:5)

யோவான் கொடுத்தது மனந்திரும்புதலுக்கென்ற ஞானஸ்நானம் (லூக். 3:6, அப். 19:4)

கிறிஸ்துவின் போதனையோ : பாவமன்னிப்புக்கென்ற ஞானஸ்நானம்.
அதை எடுப்பதற்கு நாம் பாவத்தை அல்ல இயேசு தேவனுடைய குமாரனென்று *விசுவாசத்தை* அறிக்கையிடவேண்டும் (அப். 8:37, 22:16, 2:38)

பாவத்தை அறிக்கை செய்ய யாரும் வற்புறுத்துவார்களானால் வாழ்க்கையில் செய்த எல்லா மீறுதல்களையும் யாரால் எதையும் மறக்காமல் எழுதமுடியும்? அப்படி விடுபட்ட பாவத்தை பின்னர் யாரிடம் போய் சொல்வது? ஞானஸ்நானம் எடுக்க / இரட்சிக்கப்பட பாவத்தை அல்ல விசுவாசத்தை அறிக்கையிட்டு மொத்தமான மனந்திரும்ப வேண்டும்.

2) *ஞானஸ்நானத்திற்கு பின்பு*:
ஒருவேளை எந்த மனிதருக்கும் எதிராக பாவம் / தவறு செய்திருந்தால் அவரிடத்தில் தொடர்பு கொண்டு தவறை சொல்லி ஒப்புரவாக வேண்டும் (யாக். 5:16, 1 யோ. 1:9)

நிரூபங்கள் கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டவை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக