ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

#402 - பந்தியில் பங்கு கொள்ளும் முன் பாவத்தை அறிக்கை செய்து, குற்றமற்ற மனசாட்சியுடன் பங்கு கொள்ள வேண்டுமா

#402 - *பந்தியில் பங்கு கொள்ளும் முன் பாவத்தை அறிக்கை செய்து, குற்றமற்ற மனசாட்சியுடன் பங்கு கொள்ள வேண்டுமா அல்லது ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் பங்கு பெறலாமா?*

இதில் அபாத்திரம் என்பது எதை பொருள் கொள்கிறது?
இதை சற்றே விளக்கவும் ஐயா

*பதில்* :
சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்னர் உங்கள் எரிச்சல் தணியக்கடவது என்றால் – கடைசி ஜெபம் செய்து உறங்கபோவதற்கு முன் எல்லா தவறான காரியங்களையும் உணர்ந்து ஒப்பரவாகிவிட வேண்டியது எந்த ஒரு கிறிஸ்தவனின் கடமை (எபே. 4:26)

இன்னும் சொல்லப்போனால் எப்போது ஜெபிக்கிறோமோ – ஜெபம் செய்வதற்கு முன்னர் முதலாவது தன் தவறுகளை உணர்ந்து ஒப்புரவாகிவிடவேண்டும் (மத். 5:24)

செய்த பாவத்தை பந்தி எடுக்கும் வரைக்கும் தாங்கி வர எந்த கிறிஸ்தவருக்கும் அவசியமிருக்காது என்றே நான் கருதுகிறேன்.

பரிசுத்த ஆவியானவர் நம் உள்ளத்தில் எப்போதும் உணர்த்துகிறவர். ஒரு வேளை தவறு செய்ய தூண்டப்பட்டால் நிச்சயமாக தான் செய்தது தவறு என்று அவர் மனம் உறுத்தாமல் இருக்காது. (ரோ. 2:15)

இது அனைத்தையும் தாண்டி ஒருவர் பந்தி வரைக்கும் வர நேர்ந்தால் நிச்சயமாக தன்னை ஒப்புரவாக்குவது அவசியம். அவருக்காகவும் கிறிஸ்து மரித்தாரே – அந்த அப்பம் அதன் பங்கு அல்லவா.

“அபாத்திரம்” என்பது பந்தியின் நோக்கத்தை உணராமல் எடுப்பது.
#398ல் – பந்தியின் நோக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கிறிஸ்துவின் ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்,
தொடர்பு : +91 81 44 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

----*----*----*----*----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக