#400 - *இயேசு கிறிஸ்துவின் இளமை பருவம் பற்றி பரிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது?* அவர் எங்கே? எப்படி வாழ்ந்தார்? அவருடைய இளம் வாழ்க்கை எப்படியாக இருந்தது? அது நமக்கு என்ன படிப்பினை தருகிறது? இயேசு கிறிஸ்து காஷ்மீரில் வந்து வாழ்ந்தார் என்று சிலமதவாதிகள் பரப்புரை செய்கிறார்கள்? இது உண்மையா? விளக்கம் தாருங்கள் ஐயா.
*பதில்* :
அவர் வாரம் தவறாமல் ஜெப ஆலயத்திற்கு சென்றார் (லூக். 4:16)
எப்போதும் ஜெப ஆலயத்தில் அநேகருக்கு முன்பாக வேதம் வாசிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது (லூக். 4:16-17)
பள்ளிக்கூடம் போனதில்லை (யோ. 7:15)
அனைவரிடத்திலும் நல்ல பையன் என்று பெயரெடுத்தவர் (லூக். 4:22)
ஞானத்தில் நிறைந்திருந்தார், குள்ளமாகவோ நெடு நெடு என்றோ இல்லாமல் காலத்திற்கேற்ற சரீர வளர்ச்சி, அனைவரிடத்திலும் அவருக்கான தயவு, தேவனுடைய கிருபை அனைத்திலும் நேர்த்தியாய் வளர்ந்தார் – லூக். 2:52
தேவனுடைய வார்த்தையை காது கொடுத்து கேட்பதிலும், தீர்வாக புரிந்து கொள்ளுதலையும் பழக்கமாக கொண்டிருந்தார் (லூக். 2:46)
போதகர்களே ஆச்சரியபடும் அளவிற்கு தேவனுடைய வார்த்தையில் தேறியிருந்தார் (லூக். 2:47)
அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு புத்திசாலியாக இருந்தார் (லூக். 2:48)
கீழ்படிந்திருந்தார் (லூக். 2:51)
காஷ்மீருக்கு இயேசு வந்தார் என்ற எந்த ஆதாரமும் வேதாகமத்தில் இல்லை.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +91 8144776229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக