சனி, 31 ஆகஸ்ட், 2019

#399 - சுய இன்பம், (ஆபாச படம் பாக்குறது) எவ்ளோ பெரிய பாவம், அப்புறம் இத பத்தி பைபிள் ல என்ன இருக்கிறது?

#399 - *சுய இன்பம், (ஆபாச படம் பாக்குறது) எவ்ளோ பெரிய பாவம், அப்புறம் இத பத்தி பைபிள் ல என்ன இருக்கிறது?*

இச்சை என்றால் என்ன? எப்படி வெளியே வருவது?

(இரண்டு பேர் கேட்ட கேள்வியை இணைத்திருக்கிறேன்)

*பதில்* :
யாரோ ஒருவர் மூலம் அறிமுகப்படுத்தப்படும் வரைக்கும் இந்த பழக்கம் யாருக்கும் வருதில்லை.

இப்போது அனைவரது கையிலும் மொபைல் வழியாக இலவசமாக / சுலபமாக கண்களில் படுகிறது.

ஒருவரை இச்சையோடு – மாம்சீக ஆசையோடு “பார்த்தாலே” விபச்சாரம் செய்ததற்கு சமம் என்று கிறிஸ்துவானவர் சொல்லியிருக்கிறார் (மத். 5:28)

தொடக்கத்தில் வெறுமனே அழகு என்று நினைக்க ஆரம்பித்து அதை வர்ணிக்க தொடங்கி முடிவில் நமக்கு சொந்தமில்லாதவற்றை சொந்தமாக நினைப்பது இச்சை.

இந்த இச்சை இருதயத்தில் வந்துவிட்டால் அதை நினைத்து நினைத்து பல யோசனைகளை உருவாக்கி பாவத்தில் கொண்டு போய் விடும் (யாக். 1:14-15)

மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை – பிசாசினால் உண்டானவை (1யோ. 2:16)

வாலிப வயதில் இயற்கையாகவே பாலியல் எண்ணங்கள் தலைதூக்கும் – தவறான படங்கள் கண்களில் படும் போது கவனத்தை மாற்றிக் கொள்தல், ஆபாசமான படங்களில் கவனம் செலுத்தாமல்,  அவசியமில்லாத பேச்சுகளை தவிர்த்தல், தவறான நண்பர்களோடு பழகுவதை தவிர்த்து விடுதல், கேலி கிண்டல்களில் ஈடுபடாமல் இருப்பது, மற்றவருக்கு சொந்தமானதை வர்ணித்தல் போன்றவை நாம் இச்சையில் விழுவதிலிருந்து தடுக்கும்.

இந்த பழக்கத்தில் விழுந்தவர்கள் சொந்த பிற்கால வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து வெளியே மீண்டு வரவேண்டும். தனிமையாக இருப்பதை தவிர்க்க வேண்டும். தனிமையாக உறங்குவதை தவிர்க்க வேண்டும். படுக்கைக்கு சென்றவுடன் கற்பனை சிந்தையை தூண்டாமல் உறங்க முயற்சிக்க வேண்டும்.

அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், …, விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், … , , வெறியரும், உதாசினரும், ,தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. (1கொரி. 6:9-10)

1கொரி. 6:11 - உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

எல்லாவற்றையும் அநுபவிக்க இடமுண்டு என்றாலும் தகுதியாயிராது, நாம் ஒன்றிற்கும் அடிமைபட்டுவிடகூடாது (1கொரி. 6:12).

சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர். (1கொரி. 6:13)

உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே. (1கொரி. 6:15)

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1யோ. 1:9)

மற்றவர் பார்வையில் ஒரு வேளை நாம் சுத்தமானவர்களாக இருக்கலாம் – ஆனால் தேவனுக்கு எல்லாம் தெரியுமே.  
மனந்திரும்ப இப்போதே வாய்ப்பு. எபி. 4:7

சொந்தமானதை உரிமையோடு அநுபவிக்க தேவன் வாய்க்க செய்யும் வரைக்கும் பொறுமையோடு இருத்தல் அவசியம். பிர. 7:8, சங். 40:1.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக