சனி, 31 ஆகஸ்ட், 2019

#396 *கேள்வி* வேறே ஊரில் இருக்கும் போது அங்குள்ள சபையில் கூடலாமா

#396  *கேள்வி - வேறே ஊரில் இருக்கும் போது அங்குள்ள சபையில் கூடலாமா*
 
கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தில் இணைக்கப்பட்ட நாம் example நான் கலிஃபோர்னியாவில் இருக்கின்றேன் அங்கு கிறிஸ்துவின் சபையாய் இருக்கிறேன் அங்கு நான் பிதாவாகிய தேவன் யார் என்றும் அவர் குமாரன் யார் என்றும் அறிந்து ஏற்றுக் கொண்டேன். அதே நாட்டிலே நியூயார்க்கில் கூடினால் தவறா?

*பதில்* :
இரட்சிக்கப்பட்டவர்களை கர்த்தர் தன் சபையில் சேர்த்தார் (அப். 2:47)

இரட்சிக்கப்பட்ட யாராயினும் அவருடைய சரீரத்தில் ஓர் அங்கம் (எபே. 5:30)

சபை கூடிவருதல் என்பதன் நோக்கம் – தேவனை துதிப்பது, தொழுது கொள்வது, கர்த்தருடைய பந்தியில் கலந்து கொள்வது, ஊழிய பாரத்தில் பங்கெடுப்பது மற்றும் வார்த்தையை கேட்பதாகும்.

வேறே ஊர் போனால் – அங்குள்ள கர்த்தருடைய சபையில் கலந்து கொள்ள எந்த தடையும் வேதத்தில் இல்லை. சீஷர்கள் ஊர் விட்டு ஊர் போனபோது அங்குள்ள கூடுகையில் தான் கலந்து கொண்டார்கள் – வாரத்தின் முதல் நாளில் தாங்கள் ஆதியில் சுவிசேஷம் கேட்ட சபைக்கு போகவில்லை (அப். 20:6-14)

ஒருவேளை யாராவது உங்களை அப்படி வற்புறுத்துவதாக இருந்தால் – இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
1- உங்கள் மீது இருக்கும் அன்பு அல்லது
2- உங்கள் கையில் இருக்கும் பணம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக