சனி, 31 ஆகஸ்ட், 2019

#394 *கேள்வி* சபை கூடுகையில் நேரத்தின் அவசியத்தை பற்றி தெளிவு படுத்துக

#394 *கேள்வி* சபை கூடுகையில் நேரத்தின் அவசியத்தை பற்றி தெளிவு படுத்துக. ஆராதனைக்காக சபையார் கூடுவதில்  சில நிமிடங்கள் தாமதம் ஆகும் போது என்ன செய்வது?

*பதில்* :
சபை கூடுகைக்கு தாமதமாக வருவது – 100% முழுக்க முழுக்க அலட்சியமே.

நம் தேவன் சிட்சிக்கிறவர் (உபா. 8:5)

சிட்சை என்றால் அடிப்பது அல்ல. சிட்சை என்றால் ஒழுக்கம் என்று அர்த்தம்.
நம் தேவன் நம்மை ஒழுக்கப்படுத்துகிறவர்.

சபை மூப்பர்களுக்கும் ஊழியர்களுக்கும் இந்த பொறுப்பு அதிகமாக இருக்கிறது.

*2தீமோத்தேயு 3:16 நமக்கு போதிக்கும் முறையை கவனியுங்கள்:*
1. எது சரி என்று கற்பித்தல்
2. எது தவறு என்று கற்பித்தல்
3. எப்படி சரி செய்து கொள்வது என்று கற்பித்தல்
4. சரியாக இருக்க கற்றுக்கொடுப்பது (பயிற்சி)

*2 தீமோத்தேயு 4: 2 நமக்கு போதிக்கும் முறை:*
1. தவறை சுட்டிக்காட்டி கண்டித்தல்
2. எச்சரித்து கண்டனம் பண்ணுவது
3. ஊக்குவித்து அல்லது ஆறுதலாக அறிவுரை சொல்லுதல்.

ஆட்டமும் குதித்தலும் எப்போது உள்ளே வந்ததோ அப்போதே எல்லா ஒழுக்கமும் பறந்து விட்டது.

இயேசுவின் பெயரைச் சொல்லி எங்கு கூடுகிறோமோ அங்கு அவர் நம்மோடு வந்து *இருக்கிறேன்* என்கிறார் (மத். 18:20)

அவர் முன்பாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறியாதவர்கள் சரியான நேரத்திற்கு எப்படி வருவார்கள்?

இயேசு அங்கு இல்லை என்பதை அவர்களே உணர்ந்ததால் என்னவோ “ஆண்டவரே வாரும் வாரும்” என்று கூக்குரலிட்டு திடீரென்று வந்து விட்டார் எல்லாரும் கைதட்டி அவரை வரவேற்பு செய்யுங்கள் என்கின்றனர்.  

பிள்ளைகள் புறப்படவில்லை / தூக்க கலக்கம் / துணி காயவில்லை / திடீரென்று நண்பர் வந்து விட்டார் / சாலை போக்குவரத்து அதிகம் என்று இப்படி எந்த சாக்கு போக்கும் சொல்லாமல் விடியகாலை 3மணிக்கு விமானம் என்றால் 1மணிக்கெல்லாம் போய் காத்து கிடக்க முடிகிறது.  7.15க்கு Train (தொடர் வண்டி) என்றால் சரியாக 6.45க்கு எல்லாம் போய் ப்ளாட்ஃபாரத்தில் காத்து கிடக்க முடிகிறது.

*சபைக்கு சரியான நேரத்திற்கு வரமுடியவில்லை என்றால் முழுக்கு முழுக்க உதாசீனமே*.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக