சனி, 31 ஆகஸ்ட், 2019

#393 - சூரியனை தான் பூமியும் பிற கோள்களும் சுற்றிவருவதாக அறிவியலறிஞர்கள் பலர் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் வசனத்திலோ சூரியன் சுற்றி வருவதாக உள்ளதே - இதனை விளக்குங்கள்.

#393 - *சூரியனை தான் பூமியும் பிற கோள்களும் சுற்றிவருவதாக அறிவியலறிஞர்கள் பலர் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் வசனத்திலோ சூரியன் சுற்றி வருவதாக உள்ளதே - இதனை விளக்குங்கள்.*

சங்கீதம், 19:5-6 அது (சூரியன்) தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது. அது (சூரியன்) வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனை வரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.

*பதில்* :
இன்று சூரிய உதயம் 5.45மணிக்கு என்று வானவியல் ஆய்வகம் தெரிவிக்கும்.

அவர்களுக்கு நன்றாகவே தெரியும்; சூரியன் உதிக்கவில்லை – மாறாக பூமி உருளுகிறது என்று. நடைமுறையில் அனைவரும் புரிந்து கொள்ளப்படும் வகையில் சொல்லப்படுகிறது.

விஞ்ஞான ரீதியாக இல்லாமல் எழுத்தாளர் பார்வையில் எழுதப்பட்ட கூற்று இது நீங்கள் மேலே சொல்லப்பட்ட வசனம் மற்றும் இது சம்பந்தப்பட்ட பல வசனங்களும் இதில் ஏசா. 38:8 போன்றவையும் அடக்கம்.

முக்கியமாக சங்கீத புத்தகம் – ஒரு கவிதை / அல்லது பாடலாக எழுதப்பட்டவை என்பதையும் நாம் மறந்து போககூடாது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக