சனி, 31 ஆகஸ்ட், 2019

#392 - ஞானஸ்நானத்தை குறித்து விளக்கவும்

#392 - *ஞானஸ்நானத்தை குறித்து விளக்கவும்*

*பதில்* :
பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ள கிறிஸ்து நமக்காக ஏற்படுத்தின ஒரு முறை. (அப். 22:16)

கிறிஸ்துவின் மரணத்தோடு நம்மையும் இணைத்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒரு முறை (ரோ. 6:3-4)

ஞானஸ்நானத்தை பெற்றுக்கொள்ளும் போது – நாம் தேவனுடைய பிள்ளைகளாகிறோம் (யோ. 1:12)

ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது நாம் கிறிஸ்துவை தரித்துக்கொள்கிறோம் (கலா. 3:27)

ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது நம் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைத்து பாதுகாக்கப்படுகிறது (கொலோ. 3:1-3)

ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது புதிய சிருஷ்டியாகிறோம் (1கொரி. 5:17)

ஒருவன் *மறுபடியும் பிறவாவிட்டால்* தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் இயேசு கிறிஸ்து. (யோ. 3:3)

ஒருவன் *ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால்* தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் மறுபடியும் (யோ. 3:5)

நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, *மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும்* நம்மை இரட்சித்தார்.  (தீத்து 3:5)

விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் *பெற்றவன்* இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் (மாற்கு 16:16)

இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள்போகக் கழுவப்படு என்று பவுலினிடம் அனனியா துரிதப்படுத்தினார் (அப். 22:16)

இயேசுவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்து ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் (அப். 8:37)

ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்னர் நடந்திருக்கவேண்டிய பட்டியல் கீழே கொடுக்கிறேன்:
1- கர்த்தருடைய வசனத்தை (காதால்) கேட்க வேண்டும். ரோ. 10:17, யோ. 8:32
2- அதை விசுவாசிக்க வேண்டும். எபி. 11:6, யோ. 20:31
3- சுய வாழ்க்கையை வசனத்துடன் ஒப்பிட்டு பார்த்து தவறான வாழ்க்கை முறையிலிருந்து மனந்திரும்பவேண்டும். லூக்கா 13:3, அப். 17:30
4- பாவத்தை அல்ல, விசுவாசத்தை அறிக்கையிடவேண்டும். ரோ. 10:10, மத். 10:32
5- சத்தியத்தை அறிந்து செயல்படுகிறவர்களிடத்தில் (முழுகி) ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவேண்டும். கலா. 3:27, அப். 2:38

எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டார்கள் என்று அன்றே “இயேசு கிறிஸ்து” மெய்யாகவே மெய்யாகவே என்று திரும்ப திரும்ப ஊர்ஜீதபடுத்தி சொல்லியிருக்கிறார் போலும் !!

இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுப்பதல்ல – அது வசனத்துக்கு விரோதமான முறை..

ஞானஸ்நானம் எடுத்தால் தான் இரட்சிப்பு !! (மாற்கு 16:16)

ஓரளவு போதுமானவற்றை எழுதியிருக்கிறேன்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக