வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

#390 *கேள்வி - உபாகமம் 14:26ன்படி மதுபானம் அருந்த பைபிள் அனுமதிக்கிறது என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கிறார்கள் ஐயா..இதற்கு கொஞ்சம் பதில் தாருங்கள். - விளக்கவும்*

#390 *கேள்வி - உபாகமம் 14:26ன்படி மதுபானம் அருந்த பைபிள் அனுமதிக்கிறது என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கிறார்கள் ஐயா..இதற்கு கொஞ்சம் பதில் தாருங்கள். - விளக்கவும்*அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக. உபாகமம் 14:26

மதுபானம் அருந்த பைபிள் அனுமதிக்கிறது என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கிறார்கள் ஐயா..இதற்கு கொஞ்சம் பதில் தாருங்கள்.

*பதில்* :
இந்த பகுதி அனைத்து கிறிஸ்தவர்களும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான ஒன்று.

தற்போது இருப்பது போல ஆதி காலங்களில் மருந்துகள் கிடையாது. அத்தி பழம், ஒலிவ எண்ணை, திராட்சை ரசமும்  அவர்கள் வியாதிக்கு மருந்தாக இருந்தது (ஏசா 38:21, 1தீமோ 5:23)

ஆகவே தான் ஒருவன் வியாதிப்பட்டால் மூப்பரை வரவழைப்பானாக. அவர்கள் வந்து கர்த்தருடைய நாமத்தினாலே எண்ணை பூசி அவனுக்காக ஜெபிப்பார்கள் என்றார் யாக்கோபு (5:14)

இந்த வசனத்தின் அர்தத்தை உணராமல் இந்த காலத்தில் அநேகர் *ஜெபித்த எண்னெய் குப்பியை வியாபாரமாக்கி சம்பாதிக்கின்றனர்* !!

*உங்களுடைய கேள்விக்கு வருவோம்*.
மதுபானம் என்ற இந்த சொல் மருவி வந்தது என்பதை நாம் ஆராயவேண்டும்.

திராட்சை ரசம் – என்பது புளிப்பில்லாததை குறிக்கிறது.
மதுபானம் என்பது புளிக்கவைக்கப்பட்டதை குறிக்கிறது.

ஆசரிப்பு கூடாரத்துக்குள் மதுபானம் தடுக்கப்பட்டது என்று லேவி 10:9ல் பார்க்கிறோம்.

முதலாவது நாம் அறிய வேண்டியது – வேதத்தில் முரண்பாடு இல்லை என்று. அப்படியென்றால் – இந்த வசனத்தில் வரும் மதுபானத்திற்கு என்ள சொல்வது?

நாம் வைத்துக்கொண்டிருக்கும் வேதம் – மொழிபெயர்க்கப்பட்டது. வார்த்தைகள் மொழி பெயர்க்கப்படும் போது – அதன் உட்கருத்தை சில வேளையில் நாம் மாறி புரிந்து கொள்ள வழிவகுத்து விடுகிறது.

உதாரணத்திற்கு ரோ 10:17ஐ தவறாக சிலர் புரிந்து கொண்டு பைபிளில் இருந்து கேள்வி கேட்க வேண்டும் என்று வாதாடுவார்கள். அந்த வசனத்தில் சொன்ன “கேள்வி” – வாயினால் கேட்கப்படும் கேள்வியை அல்ல – காதால் கேட்கப்படும் “கேள்வி” யை குறிக்கிறது.

மதுபானம் என்று உபா 14:26ஐ ஆங்கிலத்திலும் Strong Drink என்றே உபயோகப்படுத்துகிறார்கள்.

எபிரேயத்திலோ அந்த வார்த்தைக்கு ஷிக்கார் / ஷக்கார் shekar, shakar, shecar என்று வருகிறது. அதன் நேரடி பொருள் – மதுரமேற்றிய பானம் என்று பொருள்.  அது திராட்சையோ, ஆப்பிளோ, ஆரஞ்சோ எதுவானதாகவும் இருக்கலாம்.

மதுவும் சாராயமும் – கிறிஸ்தவனுக்கு தடுக்கப்பட்டவையே.

கத்தோலிக்கர்கள் மற்றும் சில கிறிஸ்தவ மத போதகர்கள் தங்கள் கூடுகையில் வைன் என்று சொல்லப்படும் புளித்த திராட்சை ரசம் என்று வாதிட்டு கடையில் இருந்து வாங்கி கர்த்தருடைய பந்திக்கு உபயோகப்படுத்துவது வேதத்திற்கு முற்றிலும் முரணான செயல். புளிப்பு பாவத்தை குறிக்கிறது (1கொரி 5:7-8)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
  
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக