#383 - *இரத்தம் எப்படி பாவத்தை மன்னிக்கும்* என்று ஒரு
இஸ்லாமிய சகோதரர் கேட்டார்.. எப்படி பதில் சொல்வது?
*பதில்* :
நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே
சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு
உண்டாகாது என்று எபி. 9:22ல் வாசிக்கிறோம்.
ஆனால் ஏன் இரத்தத்தைக் கொண்டு சுத்திகரிக்க வேண்டும்? – அநேக கிறிஸ்தவர்களே இந்த கேள்வியை நான் கேட்ட போது தலையை சொரிந்து கொள்வர்.
பழைய ஏற்பாட்டில் தேவன் சொன்ன வார்த்தை “இரத்தத்தை
மாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்;
மாம்சத்தோடே உயிரையும் புசிக்கவேண்டாம்" உபா. 12:23 என்றார்.
மனிதர்களிடமும் விலங்குகளிலும் பாயும் இரத்தத்துடன் தேவன் உயிரை
இணைக்கிறார். இரத்தத்தின் முக்கியத்துவம் இங்கே உள்ளது - இது ஜீவனை குறிக்கிறது.
ஜீவனானது இரத்தத்தின் மூலம் பிரதிபலிக்கிறது. ஆகவே தான் அந்த ஜீவனைக்காக இரத்தமே விலையாகிறது.
இரத்தத்தை யாரும் விலை நிர்ணயம் செய்ய முடியாது. அதை தானமாக
தான் தருகிறோம்.
கொலை செய்யப்பட்ட ஒருவரின் இரத்தப்பழியை கொலை செய்தவர் மீது
சுமத்துவது வழக்கம். இரத்தம் சிந்தும் கை என்று சொல்கிறோம் (லேவி. 17:4)
பாவம் செய்யும் போதெல்லாம் மீண்டு வர திரும்ப திரும்ப இரத்த
பலி செலுத்தப்பட்டது பழைய ஏற்பாட்டில் (லேவி. 17:11)
ஒரே முறையாக பாவமில்லாத இரத்தத்தை சிந்தி முழு
மனுக்குலத்துக்கும் இரட்சிப்பை கொடுக்கும்படி கிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பி
பலியாக ஏற்படுத்தி்னார் (எபி. 10:10, 9:14)
ஆகவே – இரத்தத்தின் மூலமே அல்லாமல் இழந்து போன ஜீவனை மீட்க வேற
எதற்குமே ஈடு இல்லை என்று பார்க்கிறோம்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக