வியாழன், 29 ஆகஸ்ட், 2019

#382 *கேள்வி* பரதீசில் உள்ளவர்கள் பரலோகம் போவார்களென்றால் இயேசுவோடு அறையப்பட்ட திருடன் பரலோகம் செல்வானா?

#382 *கேள்வி* #78 கேள்விக்கான பதிலில் நீங்கள் சொன்னதன் படி பரதீசில் உள்ளவர்கள் பரலோகம் போவார்களென்றால் இயேசுவோடு அறையப்பட்ட திருடன் பரலோகம் செல்வானா?

*பதில்* :
புதிய நியமனம் / கிறிஸ்துவின் சட்டம் சிலுவையில் கிறிஸ்துவின் மரணம் நிறைவேறும் வேளை வரைக்கும் அமுலில் இருந்தது (கொலோ. 2:14)

சிலுவையில் இருந்த கள்ளனின் பாவங்களை மன்னித்தது – மாம்சத்தில் வந்த தேவன் (1யோ. 4:2, லூக். 23:43). அவனுடைய பாவங்களை முற்றிலுமாய் மன்னிக்க இயேசு கிறிஸ்துவிற்கு சகல அதிகாரமும் உள்ளது (லூக்கா 5:24)

கள்ளன் தன் சிலுவையில் தொங்கி கொண்டிருந்த கடைசி வேளையில் இந்த சம்பவம் நடந்தமையாலும், பாவ மன்னிப்பை நேரடியாக தேவனிடத்திலிருந்து தன் உயிர் போகும் கடைசி வேளையில்  பெற்றுக்கொண்டதாலும் - வேதாகம சட்டத்திட்டத்தின் படி அவன் பரலோகம் செல்வதற்கான எந்த தடையும் காணப்படவில்லை.

இரட்சிப்புக்கான ஞானஸ்நான முறை கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின்னர் வந்தது (மத். 28:18-20)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக