புதன், 28 ஆகஸ்ட், 2019

#375 - இயேசுவின் இரத்தத்தால் இன்று வரை ஏன் இந்த சாபத்தை மாற்ற முடியவில்லை !....

#375 - இயேசுவின் இரத்தத்தால் இன்று வரை ஏன் இந்த சாபத்தை மாற்ற முடியவில்லை !*.... 

 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமே எல்லா சாபங்களையும் முறிக்க வல்லது என்றால், இன்னும், ஏதேன் தோட்டத்தில் கொடுக்கப்பட்ட கர்ப்ப வேதனை சாபம் ஏன் இன்று வரை மாறவில்லை ?....

இரட்சிக்கப்பட்ட பெண்களும் மிகுந்த வேதனையோடு தானே இன்று வரை பிள்ளை பெறுகிறார்கள் ?....

அப்படியானால் அந்த சாபம் இன்று வரை ஏன் இரட்சிக்கப்பட்டவர்களுக்கும் தொடர வேண்டும் ?....

இயேசுவின் இரத்தத்தால் இன்று வரை ஏன் இந்த சாபத்தை மாற்ற முடியவில்லை !....

*பதில்* :
நன்மை தீமை அறியதக்க பழத்தை தேவன் தடைசெய்திருந்தார் (ஆதி. 2:17)

ஜீவ விருட்சத்தின் கனியோ – அங்கே ஏதேன் தோட்டத்தில் சாப்பிட தடையில்லாமல் இருந்தது (ஆதி. 3:22, 24)

செய்த பாவமானது அவர்களை பாதித்தது மாத்திரமல்லாமல் பூமியும் சபிக்கப்பட்டது (ஆதி. 3:17)

சரீரம் மண்ணுக்கு திரும்ப வேண்டும் (மரணம்) என்ற கட்டளை பெறபட்டது (ஆதி. 3:19)

தோட்டத்திலிருந்து விரட்டப்பட்டார்கள் (ஆதி. 3:24)

தேவனிடத்திலிருந்து சரீர பிரிவு மாத்திரம் அல்ல – ஆவியிலும் பிரிந்து போனார்கள் (ஏசா. 59:2)

இந்த பிரிவை சரிசெய்ய – தேவன் உடனடியாக தீர்வை ஏற்படுத்தினார் (ஆதி. 3:15)

கிறிஸ்துவானவரை ஏற்றுக்கொண்டு அவர் கட்டளையின் படி வாழ்பவர்களுக்கு நித்திய ஜீவன் கட்டளையிடப்பட்டது (யோ. 3:16, யோ. 3:36)

சபிக்கபட்ட இந்த பூமியானது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அழிக்கப்படும் (2பேதுரு 3:10)

புதிய வானமும் புதிய பூமியுமான பரலோகத்தில் – கிறிஸ்துவின் நியாயதீர்ப்புக்கு பின்னர் அங்கு கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்படிந்து வாழ்கிற / வாழ்ந்த தேவ பிள்ளைகள் / கிறிஸ்தவர்கள் நித்திய நித்தியமாய் வாழுவோம் (2பேதுரு 3:13, வெளி. 21:1)
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக