புதன், 28 ஆகஸ்ட், 2019

#374 - இசைக்கருவியோடு இசைக்கப்பட்ட பாடல்களை ஒலிபரப்பி கேட்கலாமா?

#374 - *இசைக்கருவியோடு இசைக்கப்பட்ட பாடல்களை ஒலிபரப்பி கேட்கலாமா?*

கிறிஸ்துவின் சபையார் தங்கள் ஆராதனையில் (தொழுகையில்) இசைகருவி உபயோகப்படுத்துவதில்லை. அப்படியிருக்கும் போது - இசைக்கருவியோடு இசைக்கப்பட்ட பாடல்களை ஒலிபரப்பி கேட்கலாமா?

*பதில்* :
பாடும் போது தேவனை துதிக்கிறோம், புகழ்கிறோம், அவர் கீர்த்தியை சொல்லி வாழ்த்துகிறோம். (எபே. 5:19)

ஆகவே தான் தவறான கொள்கை ரீதியான பாடல்களை தவிர்த்து / திருத்தி, எந்த பாடலையும் அர்த்தத்தோடு கவனித்து பாட வேண்டிய கடமை நமக்கு உள்ளது (1கொரி. 14:15)

புதிய ஏற்பாட்டில் பாடல்கள் *பாடிய* போது எங்கும் இசை கருவியை யாரும் உபயோகப்படுத்தவில்லை (மத். 26:30; மாற்கு 14:26; அப். 16:25; ரோ. 15:9; I கொரி. 14:15; எபே. 5:19; கொலோ. 3:16; எபி. 2:12; யாக். 5:13).

எந்த நெருப்பை வீட்டில் உபயோகப்படுத்த வேண்டும் என்று தேவன் குறிப்பாக சொல்லாமல் – *தன் சமூகத்தில்* கொண்டு வரவேண்டிய நெருப்பை குறித்தே அவர் வகை பிரித்தார் (யாத். 30:9)

ஆகவே தொழுகையில் செய்யப்பட வேண்டியவைகளில் நாம் கவனமாக இருக்க வேண்டும் !!

பாடல், ஜெபம், தேவசெய்தி, கர்த்தரின் பந்தி, காணிக்கை – இவைகள் தொழுகையின் பகுதிகள்.

வீட்டிலோ அல்லது தொழுகை அல்லாத வேளையில் – பயிற்சிக்காக, அல்லது கேட்பதற்காக ஒலிபரப்ப படும் பாடல் – தொழுகையின் பங்கு அல்லவே. (மாற்கு 7:1-8, 1கொரி. 11:20-22)

அதே வேளையில் - தொழுகை அல்லாத நேரங்களில் கூட நம் செயல்கள் வேதத்திற்கு புறம்பே இல்லாமல் இருத்தல் அவசியம் (1கொரி. 10:31)
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக