#369 - *நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு
வேண்டிக்கொள்ளுங்கள்*. மத்தேயு 24:20
அய்யா, மேற்கண்ட வசனத்திற்கான விளக்கமளிக்கவும்
*பதில்* :
23-24ம் அதிகாரத்தை சேர்த்து படித்தால் எருசலேமின் அழிவும்
உலக அழிவுமான - 2 விதமான அழிவுகளை கிறிஸ்து
குறிப்பிடுவதை அறியலாம்.
20வது வசனம் எருசலேமின் அழிவு நாட்களை குறிக்கிறது (மத். 24:2)
அந்த அழிவு நாளில் இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள் சுலபமாய்
தப்பிப்போகும்படி அப்படிபட்ட அழிவு வேளை மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு
வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
மாரிகாலம் – தப்பிபோவதற்கு சிரமம்.
ஓய்வு நாள் – எந்த வேலையும் பார்க்ககூடாது. தொலைதூரம் நடக்க
/ ஓட கூடாது - தப்பி போவதற்கு சிரமம். (யாத். 16:29)
சுமார் 70ம் ஆண்டு நம் ஆண்டவரால் சொல்லப்பட்ட இந்த காரியம்
நிறைவேறியது. ஒரு செங்கல் ஒன்றன் மீது ஒன்று இல்லாத அளவிற்கு எருசலேம் முழுவதுமாய்
அழிக்கப்பட்டது வரலாறு.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
*Q&A Book ஆர்டர் செய்ய* :
வலைதளம் :
YouTube “வேதம் அறிவோம்” :
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக