#368 - *வேதத்தை எப்படி தியானிப்பது? நடைமுறையில் செயல்படுத்த கூடிய வழிகள் என்ன?*
*பதில்* :
அநேகர் வேதத்தை படிக்க அதிக ஆர்வம் காட்டுவார்கள். வெகு
சிலரே அதை சரியாய் படிக்க கற்றுக்கொள்வார்கள்.
சரியாய் படிக்கும் போது – நேர்த்தியாய் புரிந்து வேதத்தின்
ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.
*யார் வேதத்தை படிக்க வேண்டும்*?
இராஜாக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வேதவசனங்களைப் படிக்கும்படி
கட்டளையிடப்பட்டார்கள் (உபாகமம் 17:18-19).
பல்வேறு ஜனங்களின் நலனுக்காக வேதவசனங்கள் சத்தமாக
வாசிக்கப்பட்டுள்ளன (யாத்திராகமம் 24: 7; உபாகமம் 31: 9-13; யோசுவா
8: 34-35; நெகேமியா 8: 1-3, 8, 18; லூக்கா 4: 16-. 21; அப்போஸ்தலர்
15:21; கொலோசெயர் 4:16).
கடவுளின் வார்த்தை குடும்பங்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்
(உபாகமம் 6: 4-9; 2 தீமோத்தேயு 3:15).
அதை தனித்தனியாகவும் படிக்க வேண்டும் (சங்கீதம் 1: 2; 119: 11, 105; அப்போஸ்தலர் 8:
28-32).
வேதம் ஒரு சாதாரண புத்தகம் அல்ல. இது கடவுளின் இயல்பு
மற்றும் விருப்பத்தின் ஒரே வெளிப்பாடு; அது “போதனை, கண்டனம்,
திருத்தம், நீதியுள்ளவர்களுக்கு அறிவுறுத்தல்”
(2 தீமோத்தேயு 3:16).
இது நம்மை இரட்சிப்பில் ஞானவானாக்குகிறது. வசனத்தினால் நம்
ஆத்துமாக்கள் பிழைக்கிறது (2 தீமோத்தேயு 3:15; யாக்கோபு 1:21).
*எப்படி படிப்பது*?
நாம் வேதத்தை பகுப்பாய்வு முறையில் படிக்க வேண்டும். நாம் வேதத்தை
புரிந்துகொள்ள கடவுள் விரும்புகிறார், பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் இடையிலான
வேறுபாடுகள் "சத்திய வார்த்தையை சரியாகக் கையாளுவதற்கு" முக்கியமானவை (2
தீமோத்தேயு 2:15).
கடவுளின் மனதையும் விருப்பத்தையும் வேதம் கொண்டுள்ளது
என்பதை உணருங்கள். (2 பேதுரு 1:21).
பயபக்தியுடனும் பணிவுடனும் / கீழ்படிதலின் நோக்கத்துடனும் வேதத்தை
படிக்கவும். (1 தெச. 2:13).
தேவன் உங்களிடம் கட்டளையிடுவதை கடைப்பிடிக்க தயாராக
இருங்கள். (மத். 7:21; லூக்கா 6:46).
யார் பேசுகிறார்கள் (வேதத்தில்) என்பதைக் கவனியுங்கள். அனைத்தும்
உத்வேகத்தால் எழுதப்பட்டவை. பதிவுசெய்யப்பட்ட அறிக்கைகள் அனைத்தும் ஏவப்பட்ட
நபர்களால் பேசப்பட்டவை என்று அர்த்தமல்ல. உதாரணமாக: யோபு 2: 9; சங்கீதம் 14: 1
யார் எழுதியது யாருக்கு எழுதியது எப்போது /எந்த காலத்தில்
எழுதியது என்பதை அறிந்து வாசிப்பது மிக அவசியம்.
ஒவ்வொரு புத்தகமும் ஏன் எழுதப்பட்டது என்பதைக் கவனியுங்கள்.
உதாரணமாக, புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு புத்தகங்கள் தேவ குமாரனாக
இயேசுவை விசுவாசிக்க எழுதப்பட்டவை.
அப்போஸ்தலர் புத்தகம் ஆரம்பகால திருச்சபையின் வரலாறு.
அடுத்த இருபத்தி ஒன்று - கிறிஸ்தவர்களுக்கு வாழ்க்கை முறையை
உணர்த்தும் அறிவுறுத்தல்கள்
வெளிப்படுத்துதல் புத்தகம் என்பது முதன்மையாக விரைவில்
வரவிருக்கும் விஷயங்களைக் காட்டும் குறியீட்டு போதனையாகும்.
ஒவ்வொரு பத்தியையும் அதன் சூழல் அல்லது அமைப்பின்
வெளிச்சத்தில் படித்து புரிந்து கொள்வது அவசியம். ஜோசியம் பார்ப்பது போல படித்தால்
ஞானஸ்நானம் கூட அவசியமில்லை என்று சொல்ல தோன்றிவிடும். முழுவதுமாக ஒரு அத்தியாயத்தை
/ அல்லது சூழ்நிலையை படித்தல் அவசியம். எ.கா : 1கொரி. 1:17
மூன்று தனித்துவமான காலங்கள் இருந்தன என்பதை உணர்ந்து படிக்க
வேண்டும்.
முன்னோர்களின் காலம் (படைப்பிலிருந்து சீனாய் வரை)
மோசேயின் காலம் (சீனாயிலிருந்து சிலுவை வரை)
கிறிஸ்துவின் காலம் (அப்போஸ்தலர் 2 சபை துவங்கியதிலிருந்து கிறிஸ்துவின் வருகை வரை).
வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தின் நிகழ்வுகளின் வரலாறு மற்றும்
காலவரிசை ஆகியவற்றைக் கவனியுங்கள்.
வேதம் நமக்கு முழுமையாக அளிக்கிறது (2 தீமோ. 3:16, 17; 2 பேதுரு 1: 3).
நாம் அதைத் திசைதிருப்பக்கூடாது (கலா. 1: 6-9). எழுதப்பட்டதைத் தாண்டி நாம் செல்லக்கூடாது (1 கொரி. 4:
6). அதன் போதனையிலிருந்து நாம் சேர்க்கவோ அல்லது கழிக்கவோ கூடாது
(வெளி. 22: 18,19).
மேலே எழுதியவை இரத்தின சுருக்கமான ஒரு முக்கியமான முன்னோட்டம்
மாத்திரமே.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக