செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

#370 - அறியப்படாத தேவன் - விளக்கவும்

#370 - *அறியப்படாத தேவன் - விளக்கவும்*
எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். அப்போஸ்தலர் 17:23விளக்கவும்

*பதில்* :
க்ரீஸ் நாட்டில் உள்ள அத்தேனே பட்டணத்தில் பவுல் இருக்கிறார் (அப் 17:22)

எகிப்தை போல கிரேக்க நாடும் – விக்கிரகங்களுக்கு குறைவில்லாத நாடு (அப் 17:16)

இந்துக்களுக்கு முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளது போல கிரேக்கர்கள் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்தவை.

வானத்திலிருந்து விழுந்தது என்று ஒரு தெய்வம் (அப் 19:35)

கொஞ்சம் வித்தியாசமாக அறிவாக நடந்தாலே அவர்களையும் தெய்வம் என்று சொல்லும் பழக்கம் (அப் 14:11)

வானத்து நட்சத்திரங்களை கடவுளாக பாவிப்பதும் (அப் 14:12) அவர்கள் பழக்கம்.

மிகுந்த அறிவாளிகளாக இருந்தாலும் உண்மை அறியாத குருடராய் இருந்தார்கள் (அப் 17:18).

எதையும் வணங்கும் குணமுடையவர்கள் மத்தியில் – எதையாவது விட்டுவிட்டால் – விடப்பட்ட தெய்வம் ஏதாவதொன்று கோபித்துக்கொள்ள கூடாதென்று அறியாத தெய்வம் என்று ஒன்றை வைத்து வழிபட்டார்கள் (வ23)

கீழ்படிய மனமின்று வெறும் கதை கேட்க பிரியமுள்ளவர்களாக இருந்ததால் (அப் 17:20) அத்தனை உண்மையையும் சொல்லியும் மனந்திரும்பாமற் போனார்கள் (அப் 17:32)

இப்போதும் இந்த வகை கிறிஸ்தவர் உண்டு.

வேதத்தை வெட்ட வெளிச்சமாக ஆணித்தரமாக எடுத்துரைத்தாலும் – அதற்கு *கீழ்படிய மனம் வராமல்* தங்கள் வழிகளிலேயே புரண்டு கொண்டிருப்பதில் பிரியப்பட்டு கொண்டிருக்கும் அநேகர் உண்டு.

தசமபாகமும் மொழி பெயர்க்கப்படாத அந்நிய பாஷையை சபையில் பேசுவதும் மொத்தமாக சேர்ந்து ஆளாளுக்கு ஒரு பக்கம் ஜெபிப்பதும் ஆடலும் பாடலும் நியாயபிரமாணமும் ஓய்வு நாளும் ஆண்கள் கூடியிருக்கும் சபையின் பிரசங்க மேடைகளில் பெண்களின் ஆதிக்கமும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் – வேதத்ததை படிப்பதோடு நாம் நின்று விடாமல் அதற்கு கீழ்படிந்து கிறிஸ்தவனாக கிறிஸ்துவின் போதனையை பற்றிக் கொண்டு வாழுவோம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக