#367 - *அக்கினி அபிஷேகம் என்பது என்ன.. அபிஷேகம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒரு ஆவிக்குரிய ஆலோசனை வேண்டும்*..
*பதில்* :
அக்கினி என்ற வார்த்தை 20 வசனங்களில் 21 முறை வெளிபடுத்தல் புத்தகத்தில் மாத்திரமே வருகிறது. அந்த புத்தகம் 99% குறியீட்டு வார்த்தைகளை கொண்டு எழுதப்பட்டதாகையால் அப்படியே நாம் அர்த்தங்கொள்ள கூடாது. Its written in coded language and we need to decode to understand rightly.
ஆகவே மத்தேயு துவங்கி யூதா புத்தகம் வரைக்கும் 42 வசனங்களில் 43 முறை அக்கினி என்ற வார்த்தை வருகிறது.
ஒரே ஒரு இடத்தில் அக்கினி *மயமான* நாவுகள் அதாவது அக்கினியை *போல* நாவுகள் என்றே அப் 2:3ல் பார்க்கிறோம்.
அக்கினி என்று வருகிற மற்ற *அத்தனை* இடத்திலும் *அழிவை குறித்தே* சொல்லப்பட்டிருக்கிறது.
உதாரணத்திற்கு இந்த வசனங்களை பார்க்கவும்:
மத். 3:10, 11, 12, 7:19, 13:40, 42, 50, 18:8, 25:41, ரோ. 12:20, 1கொரி. 3:13, 15, எபே. 6:16, 2தெச. 1:8, எபி. 1:7, 12:18, 29, யாக். 3:6, 5:3, 1பேதுரு 1:7, 4:12, 2பேதுரு 3:7, யூதா 7, 22
நீங்கள் நினைப்பது போல *அக்கினி ஞானஸ்நானம்* என்பது மேன்மையையோ, அதீத இரட்சிப்பையோ, வித்தியாசமான அழைப்பையோ, விசேஷ வரமாகவோ அல்ல, மாறாக அது அழிவை தெரிவிக்கிறது* (மத். 3:11-12)
*அபிஷேகம் என்றால் என்ன*? என்ற பதிவை நம் கேள்வி பதில் புத்தகத்தில் #290ல் காணவும்.
2)
*அபிஷேகம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்*?
புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்கள் தேவனால் நியமிக்கப்பட்டவர்கள் அல்லது அபிஷேகிக்கப்பட்டவர்கள் அல்லது ஆசாரியராக்கப்பட்டவர்கள் (1பேதுரு 2:9, வெளி. 1:6, 5:10, 20:6).
ஜாதி மாறவோ, புது சபையில் உறுப்பினராகவோ, கிறிஸ்தவரை மணப்பதற்காகவோ, வேலை அல்லது படிப்பு சீட்டு வாங்கவோ அல்லாமல் *சத்தியத்தின்படி பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்ற* நாம் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறோம். (1யோ. 2:20)
உணர்ச்சிபூர்வமான வார்த்தைகளில் சிக்குண்டு ஆத்துமாவை இழக்காதபடிக்கு, வேதத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் (கொலோ. 2:8)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கிறிஸ்துவின் ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்,
தொடர்பு : +91 81 44 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2021/02/23/qa-book/
----*----*----*----*----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக