#345 - *கிறிஸ்துவை பற்றி சொல்வதும் கேட்பதும் ஈசி. ஆனால் அது போல வாழ்வது என்பது கஷ்டமான காரியம். உதாரணத்திற்கு! கிறிஸ்து குஷ்டரோகியை போய் பார்த்தார். அநியாயம் செய்கிறவனை நேசித்தார், விபசாரியை மன்னித்தார், குதிரை இருந்தும் ஒரு முறை கழுதை மேலும் மீதி நடந்தே சுற்றிதிரிந்தார். நம்மால இது எல்லாம் முடியுமா?
*பதில்* :
உண்மை தான்.
கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் தங்கள் சொந்த சிலுவையை எடுத்து சுமந்து *கொண்டே* அவரை பின்பற்ற வேண்டும் என்று சொன்னார் (மத். 10:38)
சிலுவையை சுமக்கசொல்லிட்டார்னு வெள்ளியிலும் தங்கத்திலும் ஓலையிலும் செய்து லாவமாக ஒரு விரலில் பிடித்து கொண்டு நோகாமல் வலம் வர சொல்லவில்லை !!
சிலுவை என்பது அவமானம், வேதனை, நிராகரிப்பு, பொய் குற்றச்சாட்டு, மரண அவஸ்தை, இரத்தஞ்சிந்தும் அளவிற்கு தண்டனை, பாளையத்திற்கு புறம்பே தள்ளப்படுதல், எல்லாராலும் வெறுக்கப்படுதல், நிந்திக்கப்படுதல் என்பது.
கிறிஸ்துவின் சிலுவையை அல்ல – அவனவன் தன் தன் சொந்த சிலுவையை சுமந்து கிறிஸ்துவை பின்பற்ற சொன்னார் (மத். 16:24)
செல்வ செழிப்பாய் காணிக்கை வசூல் செய்து பந்தாவாக சொகுசு வாகனத்தில் வலம் வந்து தன்னை அனைவரும் மரியாதையுடன் அழைக்க விரும்புபவர்கள் – வேதத்தின்படி ஊழியம் செய்பவர்கள் அல்ல.
அனைவரும் கிறிஸ்துவுக்குள் - சகோதரர்கள் சகோதரிகள் என்றும் எல்லோரும் (கிறிஸ்தவர்கள்) ஒரே தரத்தில் உள்ளவர்கள் என்பதை உணர்ந்து ஜீவனுக்குப்போகிற இடுக்கமான வாசலை கண்டுபிடித்து அதில் ஏற்ற தாழ்வு இல்லாமல் சத்தியத்தை சரியாக கடைபிடித்து வாழ்ந்து போதிக்கிறவர்கள் அநேகரை இன்றும் எங்கள் பார்வையிலேயே காணமுடிகிறதற்காய் நான் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் ... மத். 7:14
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக