#346 - *ஊழியர்களின் தலையாய பணி என்ன?*
*பதில்* :
“நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கனுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று” (2தீமோ. 4:5) என்கிறார் பவுல்.
எது ஊழியம்? ஊழியனுடைய / சுவிசேஷகனுடைய வேலை என்ன?
அவர் - இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிக்கிறார்.
பரலோகத்திற்கு போகும் வழியை அவர் அறிவிக்கிறார். (ரோ.
1:14-15)
விசேஷமாய் - ஊழியர்கள் தங்களைகுறித்தும்
உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அவைகளில் நிலைகொண்டிருக்கிருக்க
வேண்டும் (1தீமோ. 4:16)
ஊழியர்கள் – தங்கள் உபதேசத்தை கேளுங்கள் எங்களை பாராதிருங்கள்
என்று *சொல்லகூடாது* – அது வேதத்திற்கு புறம்பானவை. (எபி. 13:7, 2தெச. 3:7, 1தெச. 1:6, பிலி. 3:17,
1கொரி. 11:1, 1கொரி. 4:16, அப். 13:43)
மேலும் பின்வாங்கி போனவர்கள் அல்லது கிறிஸ்தவரல்லாதவர்கள்
மத்தியிலேயே தன் காலத்தை கழிக்க வேண்டும் என்பதும் சரியில்லை.
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களை – விசுவாசத்திலும் வேதத்தை
அறிகிற அறிவிலும் வளர்க்க வேண்டியது அவர்கள் கடமை (எபே. 4:11-13)
தேவ சித்தத்தின்படி எவ்வாறு வாழ வேண்டும் என்பதை ஒரு போதகர்
கிறிஸ்தவர்களுக்கு கற்பிக்க வேண்டும் (I
தீமோ. 4:11,13).
சக கிறிஸ்தவர்களுக்கு ஊக்கம் அளித்து, சரியானதைச்
செய்யும்படி அறிவுறுத்துகிறார் (I
தீமோ. 4:13; II தீமோ.
4: 2; தீத்து
2:15).
தேவனுடைய சித்தத்தை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். (தீத்து
2: 1)
தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய
ஜாக்கிரதையாயிருக்கும்படி தேவ வார்த்தைகளை குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டும்
(தீத்து 3: 8).
வேதம் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும்
உபதேசிக்கிறதிலும் கவனமாக இருக்க வேண்டும் (1 தீமோ. 4:13).
சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், பொய்யான கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகி இருக்க வேண்டும் (1தீமோ. 6:20)
கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் ஆரோக்கியமான
வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டு நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே
காத்துக்கொள்ள வேண்டும். வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால்
விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும்
முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும் தன்னை காத்து கொள்ள வேண்டும் (2தீமோ. 1:13-14, 1தீமோ. 1:3)
விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, கண்டிப்பாய்க்
கடிந்துகொண்டு புத்தி சொல்ல வேண்டும் (தீத்து 1:14)
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த்
திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணி எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும்
கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்ல
வேண்டும் (2தீமோ. 4:2)
பணத்தாசை இல்லாமல் இருத்தல் அவசியம் (கலா. 5:24)
குறிப்பாக – கிறிஸ்துவின் போதனையில் இருந்த வேதத்தை பகுத்து
(பழைய / புதிய நியமனத்தை) போதிக்க அறிந்திருக்க வேண்டும் (2தீமோ. 2:15)
பட்டியலை இன்னும் நீட்டிக் கொண்டே போகலாம் – மேலே உள்ளவை போதுமானவை
என்று நினைக்கிறேன்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2/
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
thank you brother
பதிலளிநீக்கு