வியாழன், 15 ஆகஸ்ட், 2019

#335 - மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள். யூதா 1:23ம் வசனத்தின் பொருள் என்ன?

#335 - *மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்* -  என்ற யூதா 1:23ம் வசனத்தின் பொருள் என்ன?

*பதில்* :
சத்தியத்தை அறிந்ததோடு இல்லாமல் அதை புரிந்தும் அடுத்த படியாக அந்த சத்திய வார்த்தைகளை சொந்த வாழ்க்கையில் செயல்படுத்த துணிகிறவர்களுக்கு இந்த வசனம் ஒரு பொிய சவால்.

அல்லேலூயா !!

17ம் வசனத்திலிருந்து 23ம் வசனம் வரை *நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது* என்று பரிசுத்த ஆவியானவர் வலியுறுத்துகிறார்.

கிறிஸ்துவின் ஊழியக்காரர் என்று தன்னை யார்  அடையாள படுத்திக்கொண்டாலும் அவரை ஆதரிக்க நாம் பொதுவாக யோசிப்பதில்லை.

ஆனால் இயேசுவை எதிர்ப்பவர்களை விட கிறிஸ்துவின் போதனையை முறையாய் அறியாமல் தவறாய் போதிப்பவர்கள் / நடத்துபவர்கள் அதிக ஆக்கினை அடைகிறார்கள். (யாக். 3:1)

உதாரணத்திற்கு : மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தை காணமாட்டான் என்று *மெய்யாகவே மெய்யாகவே* என்று தெள்ளத் தெளிவாய் வேதம் சொல்லியிருக்க (யோ. 3:3) :

- ஞானஸ்நானம் அவசியமில்லை என்று ஒரு பிரிவும்,

- எடுத்தால் எடுங்கள் அது உங்கள் பிரியம் என்று ஒரு பிரிவும்,

- அது ஒரு சடங்கு என்று ஒரு பிரிவும்,

- சிறு குழந்தையிலேயே எடுத்துக் கொள்ளவேண்டும் என்று ஒரு பிரிவும்,

- குழந்தையிலேயே நீங்கள் ஞானஸ்நானம் எடுத்துவிட்டதால் இனி அவசியமில்லை என்று ஒரு பிரிவும்,

மிக தெளிவாய் பரிசுத்த ஆவியானவர் ஞானஸ்நானத்தின் அவசியத்தை போதித்திருக்கிறார்.

-ஏன் எடுக்க வேண்டும் (அப். 2:38)

-எப்படி எடுக்க வேண்டும்  (மாற்கு 16:16)

-எதற்காக எடுக்க வேண்டும் (அப். 22:16)

-எப்போது எடுக்க வேண்டும் (அப். 10:37)

இப்படி ... ஒரே ஒரு விஷயத்திலேயே இவ்வளவு குழப்பத்தை உண்டுபண்ணுகிறவர்கள் – பல அடிப்படையான உபதேசத்தை குழப்பி - நரகத்திற்கே வழி நடத்துகிறார்கள் என்பது மிக கண்ணீரோடு நாம் கண்டு கொள்ள வேண்டிய உண்மை.

நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள். (யூதா 17)

...தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. (யூதா 18)

தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள். (யூதா 21)

அல்லாமலும், *நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம்பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து, மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்*. (யூதா 22-23)

மோசேயின் நியாயபிரமாணத்தில் இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்த கட்டளைபடி

– குஷ்டரோகியின் வஸ்திரத்தை, பிரமியம் உள்ளவன் வஸ்திரத்தை, இரந்த பிரேதத்தை இப்படி தொட்டவன் கூட அசுத்தமுள்ளவன்

அது போல சத்தியத்திற்கு விரோதமாக நடப்பவர்களிடமிருந்து நாம் கறைபடாமல் காத்துக் கொள்ளும்படி சொல்லப்பட்ட வசனம் இது.

மேலும், … எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.  *ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல்*, சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள். (2தெச. 3:14-15)

வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்திசொன்னபின்பு அவனை விட்டு விலகு.  அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.  (தீத்து 3:10-11)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக