#336 - *கிறிஸ்தவர்கள் பிற மத பண்டிகைக்கு வாழ்த்து
சொல்லலாமா?* அநேக கிறிஸ்தவர்கள் பிறமத பண்டிகைகளுக்கு
வாழ்த்துச் செய்திகளை கூறுவதுண்டு. கிறிஸ்தவர்கள் இதை செய்யலாமா? வேதம்
என்ன சொல்லுகிறது?
*பதில்* :
கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக் கொண்டு நம்மிடத்தில் வரும்
ஒருவர் கிறிஸ்துவின் உபதேசத்தில் நில்லாமல் (2யோ. 1:9) *தவறான போதனையை போதிக்கிறவர்களை
வாழ்த்தும் போது* அவர்களின் துர்க்கிரியைக்கும் நாம் உடன்படுகிறோம் என்று
வேதம் சொல்கிறது. (அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய
துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான் - 2யோ. 1:11)
இது – விக்கிரகாராதனை பண்டிகைகளுக்கும் பொருந்தும் (1கொரி.
10:28)
அதே வேளையில், கிறிஸ்துவின் உபதேசத்தை திட்டமாய் கடைபிடிக்கிறேன்
என்று சொல்லிக்கொண்டு பரலோகத்தின் உள்ளே நாம் மாத்திரம் தனியாக போய் விடலாமென்று *நினைத்தால்
வீணான வேலைக்காரனாகி விட வாய்ப்பு உள்ளது* என்பதையும் மறந்துவிடகூடாதாகையால் –
சத்தியம் செல்லும்படியான / சொல்ல தகும் வாய்ப்புக்கான வாசலை நாம் அடைத்து
விடக்கூடாது.
வாரத்தின் முதல் நாளில் சீஷர்கள் கூடி தேவனை ஆராதித்த போதும்
– ஓய்வு நாளில் யூதர்கள் தேவாலயத்திலும் ஜெபஆலயங்களிலும் போய் அங்கு கிறிஸ்துவை
குறித்து பிரசங்கித்த ஆதாரம் வேதாகமத்தில் உண்டு (அப். 13:14-44, அப். 14:1, அப். 17:2-3, அப். 18:4, 19, 26, அப். 19:8)
சத்தியத்திற்கு கீழ்படியாதவர்களும் தவறாய் நடப்பவர்களும் இரண்டு
பேரும் ஒரே நியாயதீர்ப்புக்கு ஏதுவாயிருக்க (2தெச. 1:7) அவர்களும் கிறிஸ்துவின்
வருகைக்கு முன்னர் சத்தியத்திற்கு திரும்பும்படியான முயற்சியை நாம் எப்போதும் ஏறெடுக்க
கடமைபட்டுள்ளோம் (1கொரி. 5:9-10)
உறவு முறியாமலிருக்க வேண்டியது அவசியமாகையால் – அவர்கள்
செய்கைக்கும் பண்டிகைக்கும் *வாழ்த்து சொல்லாமல்* ஞானமாய் தவிர்த்து விடுவதே
உகந்தது.
பலவீனமுள்ள சகோதரன் உங்கள் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே. (1கொரி. 8:11)
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக