சனி, 3 ஆகஸ்ட், 2019

#317 - சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும். யோவான் 3:14

#317 - *சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும் உயர்த்தப்படுவார் என்ற வசனத்தை விளக்கவும்*. யோவான் 3:14

*பதில்* :
மருந்து கடைகளில் (ஃபார்மஸி) இரண்டு பாம்புகளை வளைத்து படம் போட்டிருப்பார்கள்... அது இந்த சம்பவத்தை முன்னிட்டு வந்தது தான்.

இந்த சம்பவம் இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் பயணித்த போது நடந்தது – கீழே அதை விவரிக்கிறேன்:

இஸ்ரவேலர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படிக்கு, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம் பண்ணினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.

ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள்.

அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள்.

அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணினான்.

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். (எண் 21:4-8)

அது போல தேவனுக்கு விரோதமான காரியத்தை செய்ததினால் பாவம் செய்த எவனும் சிலுவையில் உயர்த்தப்பட்ட கிறிஸ்துவை நோக்கி பார்க்கும் போது – அதாவது அவர் வார்த்தைக்கு *கீழ்படியும் போது* தன் பாவத்தை போக்கி மன்னிப்பை பெற்றுக்கொள்ள ஏதுவாகிறது என்று பொருள். கீழ்படிதல் என்பது அப். 22:16ல் விவரிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் கேட்ட யோ. 3:14ம் வசனத்தின் அர்த்தம் அடுத்த 15ம் வசனத்தில் உள்ளது.

 *எடி ஜோயல் சில்ஸ்பி*
 ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக