#316 - *கிறிஸ்தவர்கள் தாலி கட்டிக்கொள்ளலாமா? மெட்டி அணியலாமா?*
*பதில்* :
திருமணமான பெண்கள் கழுத்தில் தாலி கட்டிக்கொள்வது மெட்டி
அணிவது – தான் திருமணமானவள் என்பதை மற்றவர்களுக்கு காண்பிக்கும் ஒரு அடையாளம் –
நம் கலாசாரத்தின்படி.
தாலியோடு /
அல்லது மெட்டியோடு வெளியில் ஒரு பெண் நடக்கும் போது – எதிரே வரும் எந்த
ஆண்களுக்கும் இவள் திருமணம் ஆனவள் என்று பறைசாற்றும் படி நம் கலாச்சாரத்தில்
வந்தவை.
வேதத்தில் நகை போடக்கூடாது
என்று எங்கும் கட்டளையிடப்படவில்லை.
தாலி / மெட்டி போட்டு கொள்வதும் கொள்ளாததும் அவரவர் மனதை பொருத்தது.
நம் சமுதாய நிலைமைபடி தாலி இட்டுக்கொள்வது நன்மை பயக்கும்
!!
தான் திருமணமானதை மறைப்பவர்கள் மனம் தவறான பார்வையாகுமே?
சில
பிரிவினர் 1பேதுரு 3:3ம் வசனத்தில் மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு
உங்களுக்கு அலங்காரமாயிராமல், என்ற வசனத்தை காண்பித்து
தாலியை தவிர்க்க சொல்வார்கள்.
(1தீமோ. 2:9)
ஆபரணங்களை
மாத்திரம் அல்ல மயிரைப் பின்னுவதையும் தான் இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது
என்பதை மறக்க கூடாது.
தன்
இருதயமானது அலங்காரத்தில் நாட்டமாயிராமல் சாந்தமும் அமைதியுமான அலங்காரத்தை பெற்றுக்கொள்ளுங்கள்
என்று அறிவுரை கூறுகிறார் (1பேதுரு 3:4,
1தீமோ. 2:10)
பெண்கள்
சுபாவத்திலேயே தங்களை அலங்கரிக்கும் தன்மை படைத்தவர்கள் (எரே. 2:32)
நகை அணியக்கூடாது
என்று வாதாடுபவர்கள் – ஆடம்பரமாக தலைபின்னலும், கவர்ச்சி மேடைகளும், விலை உயர்ந்த
வெள்ளைபுடவைகளை உடுத்துவதும் – வேஷமாயிற்றே !!
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக