*பதில்* :
ஜீவன் என்பது வடசொல்.
அதற்கு தமிழ் வார்த்தை – வாழ்க்கை
அதாவது நித்திய / முடிவில்லாத வாழ்க்கை என்று பொருள்.
தற்போது – மிருகங்கள் / பறவைகள் உட்பட எல்லாரும் மண்ணினால்
செய்யப்பட்ட சரீரத்தில் இருக்கிறோம். இந்த சரீரம் அழிவுள்ளது. ஆகாரம் தண்ணீர் இல்லையென்றால்
உயிர் வாழ முடியாது.
மரணத்திற்கு பின்னர் / இயேசு கிறிஸ்துவின் வருகையில் இறந்த
அனைவரும் மற்றும் அவர் வரும்போது உயிரோடிருக்கும் அனைவரும் இந்த மண்ணினால் செய்யப்பட்ட
சரீரம் களைந்து புதிய அழிவில்லாத சரீரத்தோடு எழுந்து நிற்போம்.
இயேசு கிறிஸ்து நம்மனைவரையும் – நம் செயலுக்கு தக்க
தன்னுடைய வசனத்தின்படி நியாயந் தீர்த்து – தண்டனைக்குரியவர்கள் நரகத்திற்கும்
வசனத்தின்படி உள்ளவர்கள் பரலோகத்திற்கும் அனுப்படுவோம். அது முதல் கொண்டு
முடிவில்லாத வாழ்க்கையாக ஆகாரம் தண்ணீர் சம்பாத்யம் கவலை கஷ்டம் என்று எதுவும்
இல்லாமல் சந்தோஷமாய் பரலோகத்தில் வாழ்வோம் (வசனத்தின்படி உள்ளவர்கள்)
மற்றவர்கள் காலாகாலமாக முடிவில்லாமல் நித்திய நித்தியமாய்
வேதனையில் அலறிக்கொண்டு இருப்பர்.
கிறிஸ்து எப்பொழுது வருகிறார் என்று நாம் அறியாததால் எப்போதும்
அவருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து தயாராக எதிர்நோக்கி இருப்போம்.
பாவ மன்னிப்புக்கென்று முறையாக ஞானஸ்நானம் எடுக்காதவர்கள் –
உடனடியாக கீழ்படிய வேண்டும் என்று வலியுறுத்துவது இதனால் தான்.
*வசனங்களை படிக்கவும்*:
1கொரி. 15:45-58
எபி. 9:15, யோ. 5:24
மத். 8:12, லூக்கா 3:17, மாற்கு 9:43-45
அப். 22:16
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக