#294 - *பெண்கள் கம்மல்(தோடு), மூக்குத்தி, கொலுசு,
வளையல் போன்ற ஆபரணங்களை அணியலாமா?*
*பதில்* :
ஆபரணங்களை அணிய வேண்டும் என்றோ அணிய வேண்டாம் என்றோ புதிய
ஏற்பாட்டில் எந்த கட்டாயமும் / கட்டளையும் இல்லை.
நகையை இனிமேல் நான் போடமாட்டேன் என்று ஒதுக்கி வைப்பவர்களை
நாம் கேள்வி கேட்கவோ, நகை போட்டிருப்பவர்களை நாம் உதாசீன படுத்தவோ
வேதம் நமக்கு இடங்கொடுக்கவில்லை.
அவரவர் மனதை பொருத்தது. நகை ஆபரணங்களில் ஆசை / இச்சை
வைக்காமல் இருக்க வேண்டும் என்பதே போதனை.
சில பிரிவினர் 1பேதுரு 3:3ம் வசனத்தில் மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை
உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், என்ற வசனத்தை காண்பிப்பார்கள். (மேலும் 1தீமோ. 2:9)
இந்த வசனத்தில் ஆபரணங்களை மாத்திரம் அல்ல மயிரைப்
பின்னுவதையும் தான் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை மறக்க கூடாது.
தன் இருதயமானது அலங்காரத்தில் நாட்டமாயிராமல் சாந்தமும்
அமைதியுமான அலங்காரத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுகிறார் (1பேது3:4, 1தீமோ. 2:10)
பெண்கள் சுபாவத்திலேயே தங்களை அலங்கரிக்கும் தன்மை
படைத்தவர்கள் (எரே. 2:32)
இரட்சிப்பு என்னும் அலங்காரம் நமக்கு தேவன் கொடுத்தது (ஏசா.
61:10)
மற்றவர் பொறாமை படாமல், மற்றவரை
இச்சைக்குள்ளாக ஈர்க்காமல், மற்றவரின் பார்வைக்கென்று தங்களை
மேன்மைபடுத்தாமல் தகுதியான வஸ்திரம் அணிவது உகந்தது (1தீமோ. 2:10)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக