வியாழன், 25 ஜூலை, 2019

#295 - தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும் என்பதை வேதத்தின் படி விளக்கம் தாருங்கள்

#295 - *1கொரிந்தியர் 11:10  ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். இதனை வேதத்தின் படி விளக்கம் தாருங்கள்*

*பதில்* :
முக்காடு என்பது கணவனுக்கு தான் அடங்கினவள் என்பதை பெண்கள் வெளிப்படுத்தும் ஒரு செயல் (1கொரி 11:5)

ஆண்களுக்கென்று படைக்கப்பட்டவர்கள் பெண்கள் என்பதை பெண்களுக்கு வளரும் நீளமான முடியே முக்காடை போல வளர்ந்து முக்காடிட்டு கொள்ள வேண்டிய அவசியத்தை சுபாவமே படித்து கொடுக்கிறதே என்கிறார் பவுல் (1கொரி. 11:15)

கிறிஸ்துவிற்கு பிதா தலை
புருஷனுக்கு கிறிஸ்து தலை
பெண்ணுக்கு புருஷன் தலை (1கொரி. 11:3)

சபை கூடியிருக்கும் போது – பிதாவும் கிறிஸ்துவும் மகிமைபடவேண்டும். ஆண்கள் தங்கள் தலையை (கிறிஸ்து) மூடக்கூடாது.

பெண்கள் தங்கள் தலையை (கணவன்/தகப்பன்) சபையில் உயர்த்த கூடாது.

கிறிஸ்துவே மகிமைபடுகிறார்.

மேலும் இந்த பழக்கம் கலாசாரத்தையும் சார்ந்தது. (1கொரி. 11:16)

முக்காடிட்டு கொள்வது வெட்கமானால் – தலை முடியை ஆண்களை  போல குறைத்து கொள்ளுங்கள் என்கிறார் பவுல் (1கொரி. 11:6)

எல்லா பெண்களும் தங்கள் தலையை மூடிக்கொண்டிருக்க – ஒருவர் மாத்திரம் மூடாமல் இருந்தால் – அது இறுமாப்பை காண்பிக்கிறது.

அதே வேளையில் எந்த பெண்ணுமே தன் தலையை மூடாமல் இருக்கும் போது – ஒருவர் மாத்திரம் மூட வேண்டும் என்று தன் தலையை மூடினாலும் – தன் இறுமாப்பை வெளிப்படுத்துகிறது !!!

கிறிஸ்துவின் நாமத்தில் கூடும் எந்த இடத்திலும் தேவ தூதர்களும் நம் தொழுகையை ஆர்வத்தோடு பார்க்கிறார்களாம் (1பேதுரு 1:12)

நம் தாழ்மையை அவர்கள் தேவனிடத்தில் சாட்சியாக அறிவிக்கிறார்கள் என்று பார்க்கிறோம். ( சங். 138:1; 1தீமோ. 5:21; 1கொரி. 4:9; பிர. 5:6)

ஆதார வசனங்களை வேதாகமத்திலிருந்து வாசிக்க தவற வேண்டாம்.

மேலும் முக்காடை குறித்த இன்னும் தெளிவான செய்தியை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் காணமுடியும்:


*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக