#292 - *அளந்து கொடுப்பது & கூட கொடுக்கப்படும் விளக்கம் தேவை*
நீதி. 30:6 என் படியை அளந்து என்னை போஷித்தருளும்.
மத். 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய
நீதியையும் தேடுங்கள், அப்பொழுது
இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
*பதில்* :
1) நீதி. 30:9ல் இந்த வசனத்தை தமிழ் வேதாகமத்தில் வருகிறது.
நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார்
என்று சொல்லாதபடிக்கும்;
தரித்திரப்படுகிறதினால் திருடி,
என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், *என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்*.
- அதிக ஐஸ்வரியம் – இருமாப்பை உண்டாக்குகிறது (உபா. 8:12-14, உபா. 31:20, ஓசியா
13:6)
- அதீத தரித்திரம் –கொடிய பசியும் தரித்திரமும் நீதிமானாக இருந்தாலும், தன் வயிற்றையும் பிள்ளைகளின் வயிற்றையும் நிரப்ப அநியாயம் செய்ய தூண்டுதலுக்கு
உட்படுவார்கள் (சங். 123:3)
அதை உணர்ந்த ஆகூர் தேவனிடத்தில் தேவைக்கு தக்க அளவாய் ஆசீர்வதிக்கும்படி
வேண்டுகிறார்.
2) மத். 6:33ம் வசனப்படி - கூட கொடுக்கப்படும் என்ற வார்த்தை –
அதிகமாக என்ற அர்த்தத்தில் அல்ல மாறாக அதோடு சேர்ந்து என்று பொருள்.
மற்றவற்றை காட்டிலும் – முன்னுறிமை கொடுத்து தேவனுடைய
ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும் போது ஆகாரமும் உடையும் அதற்கான ஆசீர்வாதம்
கூடவே / சேர்ந்தே வரும் என்றார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக