புதன், 3 ஜூலை, 2019

#251 - Pastor / போதகர் / ரபீ / ரபூனி என்று ஊழியக்காரர்களை அழைப்பது பரிசுத்த வேத வசனங்களின் படி சரியா?

#251 - *Pastor / போதகர் / ரபீ / ரபூனி என்று ஊழியக்காரர்களை அழைப்பது பரிசுத்த வேத வசனங்களின் படி சரியா*?

*பதில்:*
பாஸ்டர் என்கிற வார்த்தை சபைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
வேதம் இதை குறித்து என்ன சொல்கிறதென்று பார்ப்போம்:

ஆதி புத்தகமான கிரேக்க பாஷையில் எழுதப்பட்டவைகளில் (புதிய ஏற்பாட்டு) 3 கிரேக்க பதங்கள் இந்த வார்த்தையை அடிப்படையாக கொண்டுள்ளது.

பிரஸ்பூடிரோஸ் என்கிற வார்த்தைக்கு – மூப்பர் என்றும்

பொய்மென் என்கிற வார்த்தைக்கு – பாஸ்டர் அல்லது மேய்ப்பர் என்றும்

எபிஸ்கோபஸ் என்கிற வார்த்தைக்கு – கண்காணி என்றும் அர்த்தம் உள்ளது.

மேலே சொல்லப்பட்ட மூன்று வார்த்தையுமே ஒரே அர்த்தத்தை அல்லது பதத்தை குறிக்கும் (அப். 20:17; 20:28; 1பேதுரு 5:1-3)

பாஸ்டர் என்றாலும் மூப்பர் என்றாலும் கண்காணி என்றாலும் - ஒரே அர்த்தம் தான் !!

வேதத்தில் எங்கும் *பன்மையிலேயே* இந்த பதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

*சபையில் ஒற்றை தலைமைக்கு வேதத்தில் இடமில்லை !!*

பாஸ்டர் அல்லது மூப்பர் அல்லது கண்காணி என்று அழைக்கப்படுபவர் –
1- வயதானவராக இருக்க வேண்டும்
2- ஆணாக இருக்க வேண்டும்
3- திருமணமானவராக இருக்க வேண்டும்
4- சொந்த பிள்ளைகள் பெற்றிருக்க வேண்டும் – அவர்கள் தேவனுக்குள் இருக்க வேண்டும். பிள்ளை இல்லாதவர்கள் – மூப்பராகவோ அல்லது பாஸ்டராகவோ அல்லது கண்காணியாகவோ இருக்க வேதம் அனுமதிக்கவில்லை.
5- புதிய கிறிஸ்தவராக இருக்கக் கூடாது
வாசித்து பார்க்கவும் - தீத்து 1:5-9

மேலும் பாஸ்டர் (மூப்பர்) என்று சொல்லப்படுபவர் – கீழ்கண்டவற்றில் தேறியிருக்க வேண்டும்:

- சபையை மேய்க்கும் அனுபவம் (அப். 20:28)
- போதிக்க அறிந்திருக்க வேண்டும் (1தீமோ. 3:2)
- முன் உதாரணமாக இருக்கவேண்டும் (எபி. 13:7)
- ஆத்துமாக்களை கவனிக்க வேண்டும் (எபி. 13:17)
- தவறான போதனையை கண்டிக்க தெரிந்திருக்க வேண்டும் (தீத்து 1:9)

இந்த பொறுப்பில் – பெண்களுக்கு இடமில்லை.


மேலும், மத். 23:8ம் வசனத்தின் படி அனைவரும் *சகோதரர் என்றே அழைக்கப்பட வேண்டும்*.

பாஸ்டர் / பிஷப் / கண்காணி / ரபீ / ரபூனி என்பதெல்லாம் வேலையின் பெயர்.
செய்யும் வேலையை பட்டமாக வைத்துக்கொள்ளக் கூடாது !!!

ஊழியக்காரன் என்று நாகரீகமாக அழைக்க விரும்புபவர்கள் தங்களை வேலைக்காரன் என்று அழைக்க அனுமதிப்பார்களா?

மருத்துவரை கவுரவமாக டாக்டர் என்று அழைத்து பழகிவிட்ட சமுதாயம் குப்பை சுத்தம் செய்பவர் அல்லது முடி வெட்டுபவரை தொழிலை சொல்லி அழைத்தால் காவல்துறை உங்களை வரவேற்கும் !!

சகோதரர் என்றே நாம் அழைக்கப்படவேண்டும்

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக