புதன், 3 ஜூலை, 2019

#250 கேள்வி: (மத்தேயு 21:31) - விபச்சாரிகள் முதலில் சொர்கத்தில் பிரவேசிப்பாா்கள் என்கிற அதிசயம்! அது எவ்வாறு?

*#250  கேள்வி:  (மத்தேயு 21:31) - விபச்சாரிகள் முதலில் சொர்கத்தில் பிரவேசிப்பாா்கள் என்கிற அதிசயம்! அது எவ்வாறு?* விளக்குகிறீா்களா?

பல பெண்ங்களை அனுபவித்து விட்டு விபசார பெண்னுடன் சொற்க்கத்தில் வசிக்கிறார். விபசாரம் செய்தால் அவர்களுக்கு சொற்க்கம் நிச்சயம் என்று பைபுள் வசணம் சொல்கிறது..❓இது உண்மையா..

*பதில்:*
இரட்சகர் என்று அறிந்திருந்தும் – ஏறத்தாழ 3½ வருடங்கள் இயேசுவுடன் கூடவே இருந்த பரிசேயர்கள், நியாயசாஸ்திரிகள், வேதபாரகர்கள் என்பவர்கள்- எப்படி குற்றம் சாட்டலாம் என்றே யோசித்ததால் தங்கள் சொந்த இரட்சிப்பு அவர்களுக்கு கேள்வியாகிவிட்டது.

நாம் தற்போது காண்பது போல அதிகாரங்களாகவோ வசனங்களாகவோ வேதாகமம் எழுதப்பட்டிருக்கவில்லை – அது முழு கட்டுரையை போல தான் இருந்தது. ஆகவே – முழுமையாக எப்போதும் படித்தால் தான் சொல்லப்பட்ட எந்த வரிக்கும் அர்த்தம் புரியும்.

மத். 21:31ம் வசனத்திற்கு முன்னும் பின்னும் வாசித்தால் – இந்த கேள்வியின் அர்த்தம் விளங்கும் !!

அந்த வசனங்கள் கீழே:

மத். 21:28 ஆயினும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.

மத். 21:29 அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான்.

மத். 21:30 இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.

மத். 21:31 இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத். 21:32 ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்.

*வேசிகளாக இருப்பவர்கள் கூட – தேவனுடைய வார்த்தைக்கு சீக்கிரம் செவிசாய்த்து தங்கள் பாவத்தை விட்டு மனந்திரும்புவார்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்னார் (வ32)*

பரலோகத்தில் – பாவத்திற்கு இடமில்லை. கிறிஸ்துவினிடத்தில் வரும் போது (கீழ்படியும் போது) – பாவம் எடுக்கப்படும் - ரோ. 8:2

பாவம் – மரணத்தையே பிறப்பிக்கும். பரலோகம் செல்ல இயேசுவை தவிர வேறு வழியில்லை (யோ. 14:6, அப். 4:12)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக