திங்கள், 10 ஜூன், 2019

#211 கேள்வி: அ) இயேசுதான் உண்மையான தெய்வம் என விசுவாசிக்கும் மனிதர்கள் மீண்டும் ஏன் பாவ செயல்களில் ஈடுபடுகிறார்கள்?

#211 *கேள்வி: இயேசுதான் உண்மையான தெய்வம் என விசுவாசிக்கும் மனிதர்கள் மீண்டும் ஏன் பாவ செயல்களில் ஈடுபடுகிறார்கள்?* அல்லது ஈடுபடுத்தப்படுகிறார்கள்? அவ்விதமான செயல்களில் இருந்து வெளி வர என்ன செய்ய வேண்டும்

*பதில்:*

அ) உண்மையான சத்தியத்தை கேட்டு அதன்படி இரட்சிக்கப்பட்டவர்கள் – சுயமறிந்து பாவத்தில் ஈடுபடமாட்டார்கள், ஈடுபடமுடியாது. (1யோ. 1:6, 2:4)

ஆ) தேவனுக்கு மாத்திரம் விசுவாசமாக இருந்து அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடக்கும் ஜனங்கள் எப்போதும் இந்த உலகத்தாரால் துன்பபடுவார்கள் !! அவர்களுக்கு பிசாசின் சோதனை எப்போதும் இருந்து கொண்டு இருக்கும்.... (எபே. 6:12)

எப்படியாவது தேவனுடைய வழியிலிருந்து அவர்களை விலக்குவதற்கு கடைசி வரை பிசாசு முயற்சி செய்து கொண்டு தான் இருப்பான்.

வசன ஆதாரங்கள் : 2தீமோ. 3:12, சங். 37:12-15; மத். 5:10-12, மத். 10:22-25, மத். 16:24, மத். 23:34; மாற்கு 10:30; லூக். 14:26-27; யோ. 15:19-21, 16:2, 16:33, 17:14; அப். 14:22; 1கொரி. 15:19; 1தெச. 3:3-4; எபி. 11:32-38; 1பேதுரு 2:20-21, 3:14, 4:12-16, 5:9-10; வெளி. 1:9-10, 7:14, 12:4, 12:7-10

இ) நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;  சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;  பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.  இரட்சணியமென்னும், தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். (எபே. 6:11-18)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக