*#141 - கேள்வி:* நிச்சயம் ஆன பிறகு திருமணத்துக்கு முன் கல்யாணம் வேண்டாம் என்று பெண்ணோ அல்லது மாப்பிள்ளையோ திருமணத்தை நிறுத்தலாமா?
*பதில்:*
நிச்சயம் என்பது இரு வீட்டாரும் / அல்லது சம்பந்தப்பட்டவர் எடுத்துக்கொள்ளும் / சமுதாயத்திற்கு தெரிவிக்கும் வாக்குறுதி.
திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய வேதத்தில் இடமில்லை.
திருமணத்திற்கு முன்னர் ஒரு வேளை இருவரில் ஒருவர் தவறானவர் என்று நிரூபிக்கப்படும் வேளையில் பிரியலாமா கூடாதா என்பதை குறித்து வேதத்தில் எதையும் நாம் காணமுடியாது.
பிற்கால ஆவிகுறிய வாழ்க்கைக்கு தடைவரும் என்று நிரூபிக்கப்படும் போது – விலகுவது உசிதம் என்பது என் சொந்த கருத்து.
நிச்சயதார்த்தம் என்பது – பொியவர்களால் தீர ஆலோசித்து விசாரித்து ஜெபித்து எடுக்கப்படும் முடிவு. இப்படிபட்டதான முறிவு வாழ்க்கை முழுவதும் பாதிக்கலாம். தீர யோசித்து ஆலோசித்து ஆராய்ந்து பெற்றோரால் தீர்மானிக்கப்படுவது நன்மை.
ஆகவே தான் முந்தய காலகட்டங்களில் திருமணத்திற்கு முன் நிச்சயிக்கப்பட்டவர்களை பேசவோ வெளியே போகவோ பொியவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
நீதி. 3:5-6 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/BbygVjLN3mr2yki8IstAsg
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக