#142 - *எதிர்காலத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று
தெரிந்து சொல்வது தீர்க்கதரிசனமா அல்லது சொன்ன வார்த்தை நிறைவேற வேண்டும் என்று
அழுத்தம் கொடுத்து நடப்பிப்பது தீர்க்கதரிசனமா?*
*பதில்:*
தீர்க்கதரிசனம்
என்பது தேவனுடைய திட்டத்தை ஜனங்களுக்கு வெளிபடுத்துவது.
தீர்க்கதரிசனமானது
ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள் (2
பேதுரு 1:21)
ஜனங்களுடைய
பாவத்தை கண்டிக்கும் பொருட்டோ அல்லது இராஜ்ஜியத்தை முன்னிட்டு பிதாவானவர்
கிறிஸ்துவின் மூலம் வைக்கப்பட்டிருக்கும் வருங்காரியத்தை குறித்தவை (ஏசா. 7; எரே. 31-34; ஏசா. 2,
53…)
மேலும்
தீர்க்கதரிசனம் என்பது நடைமுறை காரியத்தை குறித்தும் பின்பற்றிக்கொண்டிருக்கும்
பாவத்தை கண்டிக்கும் வகையிலும் வந்திருக்கிறது. (ஏசா. 1-3; எரே. 2;…)
தீர்க்கதரிசனங்கள்
சொல்வது முடிந்து போகும் என்று பவுல் கூறியிருக்கிறார் (1கொரி. 13:8-11)
....தேவனுடைய
மனுஷன் தேறினவனாகவும், எந்த
நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, வேத வாக்கியங்கள் எல்லாம் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும்
பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. (2தீமோ. 3:16-17)
இயேசு தேவனுடைய
குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை
அடையும்படியாகவும், இவைகள்
எழுதப்பட்டிருக்கிறது. யோ. 20:31.
எந்த மனுஷனும்
பரலோகம் போவதற்கு தேவையான எல்லாவற்றையும் தேவன் நமக்கு தந்தது மாத்திரமல்ல – சொல்ல
வேண்டியவை எல்லாவற்றையும் அவர் நமக்கு சொல்லிவிட்டார் என்பதால் – எழுதப்பட்டவைகளுக்கு
மிஞ்சி எண்ணவேண்டாம் (1கொரி. 4:6).
சொல்லப்பட்டவைகளை
கூட்டியோ குறைத்தோ நாம் பின்பற்றவும் கூடாது (வெளி. 22:18-19)
சொல்லப்படாதவைகளை
தேடியும் ஓட வேண்டாம் – நமக்கு தேவையில்லை என்று தேவனே தொியபடுத்தவில்லை (உபா.
29:29)
நான் போகும் காரியம்
நடக்குமா? இந்த கலியாணம் நடக்குமா? இந்த மாப்பிள்ளை ஓகே தானா? இந்த பெண் ஓகே
தானா? இந்த பிசினஸ் செய்யலாமா? விசுவாச வளர்ச்சிக்கு தேவையானதை தாண்டி இவ்வாழ்க்கை முறையை தெரிந்து
கொள்ள நினைப்பது – ஜோசியம். அதை சொல்பவனும் கேட்பவனும் சபிக்கப்பட்டவன் என்று வேதாகமம்
சொல்கிறது.....(லேவி. 20:6; 27; 19:31; யாத். 22:18;
உபா. 18:10-12)
தற்கால மேடை
விளம்பரதாரர்கள் – ஜோசியத்தை நாகரீகமாக தீர்க்கதரிசனம் என்று சொல்கிறார்களா என்பதை
அவரவர் நிதானிக்க வேண்டும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக