#133 - *நாங்கள் எந்த பைபிளை பின்பற்ற வேண்டும்?* ஆதி முதல் இன்று வரை எத்தனை முறை பைபிள் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது, அப்படி செய்யப்பட்டு இருந்தால் நாங்கள் எந்த பைபிளை பின்பற்ற வேண்டும் (காரணம் ஒன்றை கூட்டவோ குரைக்கவோ கூடாது என்று பைபிளில் உள்ளது). நாங்கள் எந்த பைபிளை பின்பற்ற வேண்டும் அதையும் கூறுங்கள்.
*பதில்*:
உங்களுடைய சந்தேகமும் கேள்வியும் மிக சரியானது - அநேகருக்கு இந்த பதில் அவசியமான ஒன்று.
வேதாகமம் திருத்தம் செய்யப்படவில்லை மாறாக மொழிப்பெயர்க்கப்பட்டது என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.
எந்த ஆங்கில வேதாகம மொழிபெயர்பை காட்டிலும் சரியான மொழிபெயர்ப்பு என்று உலகமுழுவதும் வேத வல்லுனர்களால் ஏற்றுக்கொள்ளபட்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு 1901ல் வெளிவந்த ASV (American Standard Version). முக்கியமாக NIV என்கிற தற்போது நடைமுறையில் உள்ள ஆங்கில மொழி பெயர்ப்பு பின்பற்றாமல் இருப்பது நல்லது !!
தமிழ் வேதாகமத்தை குறித்த பதில்:
1- 1706ல் மொழிபெயர்க்க துவங்கி 1714ம் வருடம் புதிய ஏற்பாட்டை பர்த்லோமஸ் சீஜன்பால்க் (ஜெர்மானியர்) அவர்கள் தரங்கம்பாடியில் வெளியிட்டார். பழைய ஏற்பாட்டு ரூத் புத்தகம் வரை எழுதியவர் 1719ம் ஆண்டு மரித்துபோனார். பெஞ்சமின் ச்ஷல்ட்ஸ் என்பவர் மீதமுள்ளவற்றை நிறைவு செய்து 1728ல் தரங்கம்பாடியில் வெளியிட்டார்.
2- 1777ல் யோஹான் ஃபிலிப் ஃபேப்ரிகாஸ் (ஜெர்மானியர்) சீஜன்பால்கின் பதிப்பை இன்னும் மெறுகேற்றினார்.
3- 70 வருடம் கழித்து ஆறுமுக நாவலர் என்பவர் நாவலர் பதிப்பாக வேறொரு பதிப்பை வெளியிட்டபோது அரை அநேகர் எதிர்த்தனர் – இந்த பதிப்பு அநேகமாக நடைமுறையில் இல்லை.
4- 1833ம் வருடம் ரீனஸ் என்பவர் தமிழ் வேதாகம சங்கம் (பைபிள் சொசைட்டி) மூலமாக 1790ல் புதிய ஏற்பாட்டை இன்னும் தெளிவுபடுத்தி வெளியிட்டார்.
5- முழு வேதாகமத்தையும் 1840ல் முதல் முதலாக வேதாகம சங்கம் வெளியிட்டது. ஃபேப்ரிகாஸ் மொழிபெயர்த்த பழைய ஏற்பாடும் ரீனஸ் மொழி பெயர்த்த புதிய ஏற்பாடும் அடங்கியிருந்தது.
6- 1850 இலங்கை யாழ்பானம் பகுதியிலிருந்து வெளியிடப்பட்ட பதிப்பை அநேகர் அங்கீகரிக்கவில்லை.
7- பின்னும் 1871ல் வெளிவந்த பதிப்பை இப்போது நாம் பயன்படுத்தி வருகிறோம்.
நம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் – மூல மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டவையாகும் !!! இந்த பாக்கியம் ஆங்கில வேதாகமத்திற்கு கிடையாது.
இன்னுமொரு புதிய மொழிபெயர்ப்பு தமிழ் வேதாகமம் தற்போது நடைமுறையில் உள்ளது – வார்த்தைகளின் முக்கியத்துவம் மற்றும் கனம் குறைக்கப்பட்டு நிறைய வசனங்கள் நடைமுறை வார்த்தைகளில் வருவதால் நான் அதை பெரிதும் விரும்புவதில்லை..
வழக்கமாக உபயோகபடுத்தப்படும் தமிழ் வேதாகமம் (பொது மொழிபெயர்ப்பு / Standard Version) உபயோகபடுத்த உகந்தது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக