வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிரா விட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 5:20
1) வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதி என்றால் என்ன?
2) அவர்களை காட்டிலும் நாம் எப்படி கிறிஸ்தவ வாழ்க்கையில் அதிக நீதியை செய்ய முடியும்?
3) அப்படியென்றால் நாம் எப்படி பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிக்கப் போகிறோம்?
*பதில்:*
*1) வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதி என்றால் என்ன?*
வெளியரங்கமான சடங்குகளிலும் பாரம்பரியத்திலும் அவர்களின் நீதி இருந்தது.
பலி செலுத்தினார்கள், அடிக்கடி உபவாசித்தார்கள். அதிகம் ஜெபித்தார்கள் கை கழுவுவதிலும் தசமபாகம் கொடுப்பதிலும் மார்க்க சட்டங்களை கடைபிடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தினார்கள்.
நீதியையும் சத்தியத்தையும் இருதயத்தின் பரிசுத்தத்தையும் விட்டு விட்டார்கள்.
ஆதாரம் மத் 23:13-33, லூக்கா 18:10-14, ரோ 10:2-3,
*2) அவர்களை காட்டிலும் நாம் எப்படி கிறிஸ்தவ வாழ்க்கையில் அதிக நீதியை செய்ய முடியும்?*
இயேசு கிறிஸ்து விரும்பும் நீதியோ ஆவியின் வரங்களல்ல கனியில் வெளிபடுகிறது:
பரிசுத்தம், சாந்தம், நேர்மை, பொறுமை, தேவ பயம், அன்பு போன்றவை. (கலா 5:22)
*3) அப்படியென்றால் நாம் எப்படி பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிக்கப் போகிறோம்?*
பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான் - மத் 7:21
சொல்வதை (வேதத்திலிருந்து) சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் - மாற் 10:15
ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்கும் படியாய் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும். யோ 3:3-5
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தர் இயேசுவின் போதனையை கடைபிடிக்க வேண்டும் – எபி 12:24
வேத வசனத்தை கேட்டு, விசுவாசித்து, மனந்திரும்பி, பாவத்தை அல்ல - விசுவாசத்தை அறிக்கையிட்டு ஞானஸ்நானம் பெற்று சத்தியத்தின் படி வாழும் போது நம் பெயர் ஜீவபுஸ்தகத்தில் நிலைத்திருக்கும் – அப்போது நியாயதீர்ப்பிற்கு பின்னர் பரலோகம் பிரவேசிப்போம்.... (வெளி 21:27)
* *இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுத்தவர்கள் கவனிக்கவும்* *
வேதாகமம் அவ்வாறு சொல்லவில்லை !! இரட்சிப்பின் வழியை பிசாசு மாற்றி போட்டிருக்கிறான் – கவனத்தில் கொள்ளவும். ஞானஸ்நானத்திற்கு பின்னரே இரட்சிப்பு... (மாற்கு 16:16) -- தவறுதலாக / தொியாமல் ஞானஸ்நானம் எடுத்திருப்பின் – இன்னும் காலமிருக்கிறது. ஜீவனுக்கு போகும் வாசலை தேடி தான் கண்டு பிடிக்கவேண்டும் (மத் 7:14)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக