புதன், 22 மே, 2019

#173 கேள்வி: வாரத்தின் முதல்நாள் வரும் காணிக்கையை நாம் வருங்கால வைப்பு நிதி வருமானத்திற்கு சேர்த்து வைக்கலாமா?

#173 *கேள்வி: - வாரத்தின் முதல்நாள்  வரும் காணிக்கையை  நாம் வருங்கால வைப்பு நிதி வருமானத்திற்கு சேர்த்து வைக்கலாமா?*

*பதில்:*
நிலத்தையும் சொத்துக்களையும் விற்று சபையில் தேவைபடுவோர்க்கு உதவும்படி கொண்டு வந்தார்கள் (அப். 2:45)

நிலத்தையும் சொத்துக்களையும் விற்று அப்போஸ்தலர் பாதத்தில் (வசம்) கொடுத்தார்கள் (அப். 4:35-37, 5:2)

ஆனால் – அப்போஸ்தலர்களோ சபை பணத்தை தனக்கென்று அல்லது தன் பணப்பையில் அதை சுமக்கவில்லை (அப். 3:6)

சபை வளர்ச்சிக்கென்றும் சபை உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவைக்கென்றும் அவை பயன்பட்டது (2கொரி. 8:2, 9:5-13)

மேலும் சபை ஊழியர்களுக்கும் உதாரத்துவமாய் உதவினார்கள் (பிலி. 4:10)

சபை காணிக்கையை ஊழியர் தன் கையில் புழங்கும் முறை வேதாகமத்தில் எனக்கு தொிந்தவரைக்கும் காணமுடியவில்லை.

அதை சபை வளர்ச்சிக்கென்றும் விசுவாசிகளின் அத்தியாவசிய உதவிகளுக்கென்றும் பயன்படுத்தப்படவேண்டும்.

மிஞ்சி வரும் பணத்தை சொந்த கரங்களில் வைப்பது சரியில்லாததால் -  வங்கியில் போட்டு அவசியபடும் போது எடுத்து உபயோகப்படுத்துவதில் தவறு  ஏதும் இல்லை. வங்கியில் பணம் இருப்பதால் அவர்கள் அதற்கான வட்டி விகிதத்தை தருகிறார்கள்.

காணிக்கை கொடுக்கப்பட்ட நோக்கத்திற்கு அதை செலவளிக்காமல்,
அவசியத்தை உணராமல், அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தாமல் பணத்தில் குறியாய் இருப்பவர்கள் ஊழியத்திற்கு தகுதியற்றவர்கள் (1தீமோ. 3:3).

மேலும் - வேதாகமத்தின் படி போதகர்கள் பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதில்லை. அது மூப்பர்களுடைய வேலை !! (1தீமோ. 3:5, அப். 6:2).

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக