புதன், 22 மே, 2019

#172 - ஆலயத்தில் செருப்பு போட்டுக்கொண்டு ஆராதனையில் பங்கு கொள்ளலாமா?

#172 -  *ஆலயத்தில் செருப்பு போட்டுக்கொண்டு ஆராதனையில் பங்கு கொள்ளலாமா?*
 
*பதில்*:
யாத். 3:5ம் வசனத்தில் தேவன் மோசேயை நோக்கி பாதரட்சையை கழற்றி போடு இது பரிசுத்த பூமி என்றார்.

மோசேயின் பிரமாண காலங்களில் தேவனை தொழுது கொள்ள ஜனங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கே (எருசலேம் தேவாலயம்) செல்லவேண்டும்.

அப்போது - தேவாலயம் என்பது ஒன்று தான் இருந்தது. மற்றவை எல்லாம் ஜெபஆலயங்கள்.

இயேசு கிறிஸ்து சமாரியா ஸ்திரீயிடம் தெளிவாக சொன்னார் – எங்கும் தொழுது கொள்ளும் காலம் வருகிறது என்றார் (யோ. 4:21)

கிறிஸ்துவின் மரணத்திற்கு பின்னர் – 50வது நாளில் இராஜ்ஜியம் ஸ்தாபிக்கபட்பட்டது.

கிறிஸ்தவர்கள் வீடுகளில் கூடினார்கள். உட்கார்ந்து இருக்கும் இடமோ / வசனம் சொல்கிற இடமோ என்று இப்போது வித்தியாசம் இல்லை.

சுகாதாரத்தின் அடிப்படையில் காலனி உள்ளே கொண்டு செல்வது இல்லையே தவிர – மற்றபடி பரிசுத்தம் என்று நாம் எந்த இடத்தையும் சொல்வதற்கில்லை. இருதயமே பரிசுத்தப்படவேண்டியதானது.

தென்இந்தியர்கள் கூடுமானவரை காலனிகளை வெளியே கழற்றிவிடுவது கலாசாரத்தின் அடிப்படையில் மற்றும் பரவலான மக்கள் பல இடங்களுக்கும் சாலையிலும் வயலிலும் மண்மேடுகளிலும் கடந்து நடந்து செல்பவர்கள். ஆகவே ஒரு வீட்டினுள் செல்லும்போது காலணிகளை கழற்றிவிட்டு கால்களை கழுவினதும் உள்ளே செல்வது வழக்கம்.

கலாச்சாரத்தின்படி அனைவரும் காலணியை வெளியே போட்டிருக்கும் போது நாமும் அதையே பின்பற்றுவது அவர்கள் மனம் கோணாமல் இருக்க செய்யும் (1கொரி. 8:11, ரோ. 14:15)

கவனிக்க:
நாமே ஆலயமாக இருக்கிறோம் (1கொரி. 3:17) – கூடுமிடும் வெறும் கட்டிடமே !!

ஆகவே - தொழுது கொள்ளும் போது பாதரட்சை அணிவதும் அணியாமல் இருப்பதும் கலாச்சாரத்தையும் சூழ்நிலையையும் பொறுத்தது. தேவன் இருதயத்தின் பரிசுத்தத்தையே கவனிக்கிறவர்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

2 கருத்துகள்:

  1. பெயரில்லா23 மே, 2019 அன்று 10:20 AM

    Joseph Rajan Rajan

    இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி ---------என்னுடைய வீடு ஜெப வீடு எனப்படும் நீங்களோ அதை கள்ளர்------(மத் 21:12,13)
    தேவாலயமும் ஜெபகூடமும் ஒன்று தான் ஆனால் பரிசுத்தமான இடம் அங்கே செருப்புக்கு என்ன வேலை

    பதிலளிநீக்கு
  2. மோசேயின் பிரமாண காலத்தில் உள்ளவைகளை இந்த சம்பவம் குறிக்கிறது.
    தேவாலயம் (Temple/Church) என்பது வேறு – எருசலேமில் கட்டப்பட்டது
    ஜெபஆலயம் (Synagogue) என்பது வேறு – எல்லா ஊர்களிலும் இருந்தது...

    இப்போது நாம் கிறிஸ்துவின் சட்டத்தின் கீழ் இருக்கிறோம்.
    ஜெபஆலயம் / தேவாலயம் என்பதற்கு எந்த வித்தியாசமும் காணவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் – நாமே ஆலயமாக இருக்கிறோம்.

    பழைய நியமனத்தில் ஆலயம் என்பது கட்டிடங்களை குறிக்கிறது.

    பதிலளிநீக்கு