#171 *மலைகளின்மேல் சாப்பிடாமலும் என்றால் என்ன?*
மலைகளின்மேல்
சாப்பிடாமலும், இஸ்ரவேல்
வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும் தன்
அயலானுடைய மனைவியைத் தீட்டுபடுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும் …… எசேக்கியேல்
18:6
இந்த
அதிகாரத்தில் மலைகளின்மேல் சாப்பிடாமலும் என்றால் என்ன?
பதில்:
விக்கிரக
ஆராதனைகாரர்கள் வழக்கமாக உயர்ந்த மேடுகளிலும் உயர்ந்த மலைகளிலும் தங்கள் தெய்வங்களை
வைத்து வணங்கும் பழக்கம் உண்டு.
மலைகளில் மேல்
சாப்பிடாமல் என்பதன் பொருள் – விக்கிரக ஆராதனைக்குட்படாதீர்கள் என்பது.
வசனம் :
எசே. 6:13 அவர்கள்
தங்கள் நரகலான சகல விக்கிரகங்களுக்கும் மதுரவாசனையான தூபத்தைக் காட்டின
ஸ்தலங்களாகிய உயர்ந்த சகல மேடுகளிலும், பர்வதங்களுடைய
சகல சிகரங்களிலும், பச்சையான சகல
விருட்சங்களின்கீழும், தழைத்திருக்கிற சகல
கர்வாலி மரங்களின்கீழும், அவர்களுடைய
நரகலான விக்கிரகங்களின் நடுவிலும் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும், அவர்களில் கொலையுண்டவர்கள் கிடக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்)
எசே. 20:28 அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட
தேசத்திலே நான் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் உயர்ந்த
ஒரு மேட்டையும் தழைத்த ஒரு விருட்சத்தையும் எங்கெங்கே கண்டார்களோ, அங்கங்கே தங்கள் பலிகளைச் செலுத்தி, அவ்விடங்களிலெல்லாம் எனக்கு எரிச்சல் உண்டாக்குகிற தங்கள்
காணிக்கைகளைப் படைத்து, சுகந்த வாசனையான தங்கள்
தூபங்களைக் காட்டி, தங்கள் பானபலிகளை
வார்த்தார்கள்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக