திங்கள், 20 மே, 2019

#167 - வேறேதும் சுருள்கள் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளதா? இந்த ஏசாயா தீர்க்கதரிசன புஸ்தகம் முக்கியபடுத்தப்பட்ட காரணமென்ன?

#167 - *வேறேதும் சுருள்கள் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளதா?*

1) அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:

வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.  லூக்கா 4:17,20

2) அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு; நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.  அப்போஸ்தலர் 8:30

இரண்டு இடத்திலேயும் ஏசாயா தீர்க்கத்தரிசியின் புஸ்தகம் அடையாளப்படுத்த படுகிறது.

வேறேதும் சுருள்கள் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளதா?

இந்த ஏசாயா தீர்க்கதரிசன புஸ்தகம் முக்கியபடுத்தப்பட்ட காரணமென்ன?

*பதில்:*
ஆதி காலங்களில் அனைத்து எழுத்துக்களுமே – சுருள் வடிவத்தில் தான் இருந்தது என்று வரலாறு கூறுகிறது. (ஏசா. 34:4)

அதிகமான சுருள்களை சவக்கடல் அருகே கண்டுபிடித்தாகவும் தகவல் உண்டு.  யோர்தான் நதி, எரிகோ பட்டணம், சோதோம் கொமோரா போன்ற பட்டனங்கள் சவக்கடலை சுற்றி / அருகாமையில் உள்ளது.

ஏசாயா தீர்க்கதரிசன புஸ்தகத்தை ஒரு மினி பைபிள் என்று வேத வல்லுனர்கள் சொல்வதுண்டு.

வேதாகமத்தில் 66 புஸ்தகம் இருப்பது போல் – ஏசாயா புஸ்தகம் 66 அதிகாரம் கொண்டது.

பழைய ஏற்பாட்டில் 39 புத்தகமும்
புதிய ஏற்பாட்டில் 27 புத்தகமும் இருப்பது போல ஏசாயா புத்தகத்தில் முதல் 39 அதிகாரம் வரைக்கும் நடந்தவைகளை குறித்தும் பின்னர் வரும் 27 அதிகாரம் நடக்கப்போகிறவைகளை குறித்தும் எழுதப்பட்டிருக்கும்.

புஸ்தகமாக ஏசாயாவை மாத்திரம் குறிப்பிடப்பட்டாலும் எஸ்றா, நெகேமியா, எஸ்தர், பிரசங்கி மற்றும் உன்னதப்பாட்டு புத்தகங்களை தவிர பாக்கி எல்லா புத்தகங்களுமே நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உதாரணத்திற்கு :
தானியேல் : மத். 24:15
யோபு : யாக். 5:11

ஏசாயாவை தவிர வேறு எந்த புத்தகத்தையும் சுருளாக குறிப்பிடபடவில்லை என்றாலும் மேற்சொல்லிய 5 புத்தகங்களை தவிர பாக்கி எல்லா புத்தகத்தின் குறிப்புகளும் மறைமுகமாகவோ நேரிடையாவோ 247 இடங்களில் (பட்டியல் என்னிடத்தில் இருக்கிறது) புதிய ஏற்பாட்டில் காணமுடியும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக