திங்கள், 22 ஏப்ரல், 2019

#112 பரிசேயர் சதுசேயர் சாமாரியர் யூதர் கிரேக்கர் - இவர்களுக்கு இந்த பெயர் வர காரணம் என்ன ?

*#112 பரிசேயர் சதுசேயர் சாமாரியர் யூதர் கிரேக்கர் - இவர்களுக்கு இந்த பெயர் வர காரணம் என்ன ?*

யார் சதுசேயர்
யார் பரிசேயர்
யார் சமாரியர்
விளக்கவும்

*பதில் :*
இஸ்ரவேலர்களில் யூத மத கோட்பாடு மற்றும் மோசேயின் நியாயபிரமாணத்தில் கற்று தேர்ந்தவர்கள் பரிசேயர் - சதுசேயர் என்பவர்கள் .

இவர்களில் உள்ள வித்தியாசம்:

*சதுசேயர்* – உயிர்தெழுதல் இல்லை என்பவர்கள் (Mat 22:23 உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையதினம் அவரிடத்தில் வந்து)

*பரிசேயர்* – உயிர்தெழுதல் உண்டு என்று நம்புபவர்கள்

அப் 23:6-8 பின்பு அவர்களில், சதுசேயர் ஒரு பங்கும் பரிசேயர் ஒரு பங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன். மரித்தோருடைய உயிர்த்தெழுதலைப்பற்றிய நம்பிக்கையைக் குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான். அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாயிற்று; கூட்டம் இரண்டாகப் பிரிந்தது.  என்னத்தினாலென்றால், சதுசேயர் உயிர்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்.

*சமாரியர்* –
சாலமோன் இராஜா மரித்ததும் அவன் குமாரன் ரெகோபெயாம் பட்டத்திற்கு வந்தார்.

ஜனங்களின் ஆலோசனையை கேட்காததினால் மொத்தம் உள்ள 12 கோத்திரத்தில் யூதா பென்யமீன் கோத்திரம் தவிர 10 கோத்திரத்தார் இஸ்ரேல் தேசத்தின் வடக்கு பக்கம் தனியாக பிரிந்து போனார்கள். அவர்கள் யெரோபெயாமை இராஜாவாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார்கள். அவர்கள் பகுதியல் வரும் இடத்திற்கு பெயர் சமாரியா. அங்கு வசித்தவர்கள் சமாரியர். மிக பொிய வரலாற்றின் ஆக சிறிய வரியில் சொல்லியிருக்கிறேன். (1 இராஜா 12)

இந்த பிரிவுக்கு பின்னர் தெற்கு பகுதியில் ரெகோபெயாமோடு எருசலேம் நகரத்தை தலைமையிடமாக மீதமிருந்த 2 கோத்திரத்தையும் – யூதர்கள் என்று அழைக்கிப்படுகிறார்கள்.

பிரிவுக்கு முன்னர் – இஸ்ரவேலர்கள் என்பது 12 கோத்திரத்தாரையும் சேர்த்து சொல்லப்பட்டு வந்தது.

பிரிவுக்கு பின்னர் – பொதுவாக இஸ்ரவேலர்கள் என்பவர்கள் பிரிந்து போன 10 கோத்திரத்தையும் யூதர்கள் என்பவர்கள் 2 கோத்திரத்தையும் குறிக்கிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக