செவ்வாய், 16 ஏப்ரல், 2019

#105 - சிலுவையில் என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கூறுகின்றார்.

*#105 - *சிலுவையில் என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கூறுகின்றார். ஒரு கடவுள் ஒரு கடவுளை கைவிட முடியுமா?தேவ குமாரனையே கைவிட்டார் என்றால் நாம் எம்மாத்திரம்? கைவிட்டதின் நோக்கம் என்ன சார்

*பதில்:*
காட்டிக்கொடுக்கபடும் வேளை வந்த போது - கிறிஸ்து சொன்னது:

யோ. 16:32 இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் *நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்*.

இயேசு சிலுவையில் அறையப்பட்டுக் கொடூரமான மரணத்தை அனுபவித்தார் - சீடர்கள் அவரை விட்டு போனபொழுது கூட தான் தனியாக இருக்க மாட்டேன் என்று கூறினார்.

*ஒரு சாரார் – உலக பாவத்தை கிறிஸ்து சுமந்ததினால், பிதாவாகிய தேவன் அவரை விட்டு சிறிது நேரம் விலக நேர்ந்தது என்று சொல்கின்றனர் – அது முற்றிலும் தவறானது*.

*கீழ்வரும் வசனங்களை கவனிக்கவும்*:
1Pe. 2:22 அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;

Heb. 4:15 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

Heb. 7:26 பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.

இயேசு பாவியாக சிலுவையில் அழையப்பட்டிருந்தால் - உலகத்தின் பாவங்களை அகற்றுவதற்கு அவர் சரியான பாவநிவாரண பலியாக இருந்திருக்கமுடியாதே !!

1கொரி. 5:21ம் வசனம் மேலோட்டமாக ஒரு வேளை அவர்களை திசைதிருப்புகிறது என்று நினைக்கிறேன் - 2Co 5:21 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

லேவி. 4:3ன் படி – பாவ ஜனங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பலி. பாவத்தையோ அந்த பலி ஆடு தன் சரீரத்தில் ஏற்றுக்கொள்வதில்லை !!

*அப்படியென்றால் என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று இயேசு சொன்ன வார்த்தைக்கு என்ன அர்த்தம்?*

அநேக வேளையில் இயேசு சொன்னவைகள் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

அவர் சிலுவையில் சொன்ன வாக்கியம் சங்கீதம் 22ன் தொடக்கத்தில் வருவதை பார்க்கமுடிகிறது. சங்கீதம் 22ஐ தொடர்ந்து படிக்கும் போது இயேசு சொல்ல வந்ததை உணர முடியும்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் பட்ட பாடுகள் ஒவ்வொன்றையும் வரிவரியாய் அந்த 22ம் சங்கீதத்தில் காணமுடியும். பாடுகளை மாத்திரம் அல்ல – பிதாவின் மீது அவர் வைத்திருக்கும் முழு நம்பிக்கை அங்கு வெளிப்படுவதை காணமுடியும்.

கைவிட்டீர் என்ற பதம் – அவரை தள்ளிவிடவில்லை – மாறாக நம் அனைவரின் பாவத்திற்காக பாவ நிவாரண பலியாக இயேசுவை பிதாவானவர் நமக்காக பரிசேயர்/ஆசாரியர் கைகளில் விட்டார்.

ஏன் என்ற கேள்விக்கு அந்த சங்கீதத்திலேயே வரும் நம்பிக்கையின் தீர்மானங்கள் நமக்கு தெளிவாய் பதில் அளிக்கிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக