ஞாயிறு, 17 மார்ச், 2019

Daily Dose 17-3-19

நமக்காய் மரித்து அடக்கம்பண்ணப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழுந்த கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

தினமும் ஆசீர்வாதத்தை காலையில் படித்து ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆமேன் என்று வாழ்க்கையை துவங்கி சொந்த வழியில் போய்க்கொண்டிருந்தது போக – வேதத்தை ஒப்பிட்டு நேற்றைய தினத்தில் லெந்து நாட்களை அனுசரிப்பதை குறித்து எழுதின போது பலருக்கு சுருக்கென்றது... தற்போது செய்து கொண்டிருப்பது தவறு என்றதும் மனம் பலருக்கு வலித்து விட்டது.

இப்போது கொஞ்சம் மனம் வருந்தினாலும் வேதத்தின் அடிபடையில் இப்போதே நம்மை திருத்திக்கொண்டால் நித்திய நரகத்திற்கு தப்பித்துக்கொள்ளலாம்.. சொற்ப நாள் சந்தோஷத்தை ஆதரித்து நித்திய வாழ்நாளை வீணாக்கிவிட வேண்டாம் !!

நேற்று கூறியது போல இன்றும் சில குறிப்புகளை கீழே எழுதுகிறேன்:

1- லெந்து நாட்களும் ஈஸ்டர் பண்டிகையையும் கொண்டாடினதாக வேதாகமத்தில் எங்கும் காணமுடியாது.  அவருடைய மரணத்தை வாரத்தின் முதல் நாளில் நினைவுகூர்ந்தார்கள் என்று தான் பார்க்கமுடியும் (மாதத்தின் முதல் வாரத்தில் அல்ல !!)  1 கொ 11:23-26, அப் 20:7

2- தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் விவாகம் செய்யாதிருக்கவும் ஜனங்களுக்கு பொய்யர் கட்டளையடுவார்கள் என்று 1தீமோ 4:2-3ல் சொல்லும் காலத்தை தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

3- மனுஷருடைய கற்பனைகளையும் பாரம்பரியங்களையும் கடைபிடித்து தேவனுடைய சமூகத்தில் வருவது பாவம் என்று கிறிஸ்து சொல்கிறார் (மத் 15:8-9)

4- லெந்து நாட்களில் தங்களை சுத்தமாகவும் பரிசுத்தமாகவும் வைத்துக்கொள்ள் வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்ற நாட்களில் பாவ வாழ்க்கை வாழ வேதாகமம் இடம் கொடுக்கிறதோ? நாம் எல்லா நாளும் பரிசுத்தமாய் வாழ தேவ குமாரன் தன் ஜீவனை கொடுத்தாரே ! 1 யோ 3:4-8

(1Jn 3:7) ... நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான். (வ18-20) ... வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்குமுன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.  நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.

சிந்திப்போம், சீர்படுவோம் – தேவனுடைய பிள்ளைகளாய் தொடர்ந்து வாழ்வோம். தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

எடி ஜோயல்
+968 93215440

Subscribe at https://joelsilsbee.blogspot.com
Wishing you in the name of our Lord Jesus Christ, who died, buried and risen on the 3rd day  for us.

Instead of reading a blessing sentence / words in the early morning to spell O’Lord, thank you, Halleluah, Amen etc, yesterday when I wrote about the observance of Lent  days quoting the scripture – many were pierced into their heart felt sorrowful.

Though you are bit upset now but correcting according to the scripture will refrain from throwing into eternal fire at later stage… looking at short term happiness – do not loose the eternal happiness !!

As I said yesterday, I am quoting few more on the same topic:

1- Lent days or Easter day are never celebrated in the Bible. Jesus wants His people to remember His death every first day of the week (not once in every month !!) in the Lord's Supper (I Corinthians 11:23-26), Acts 20:7

2- Scripture says that “In latter times we will see people will teach forbidding to marry, and commanding to abstain from foods" (I Timothy 4:3). Are we not in such days now??

3- Christ says, it is sin to honour and bring the traditions of men as doctrines from God. Mat 15:8-9

4- If you claim you are living holy in these days; has Bible authorized to live unholy on the rest of the days? The Son of God died for us so we live Holy everyday ! (1 John 3:4-8)

(1Jn 3:7)   don't let anyone deceive you. The person who practices righteousness is righteous, just as He is righteous. (V18-20) we must stop loving in word and in tongue, but instead love in action and in truth. And this is how we will know that we belong to the truth and how we will be able to establish our hearts in his presence. If our hearts condemn us, God is greater than our hearts and knows everything.

Think about it and rectify if required – We are to live as God’s Children.

May the magnificient God in Heaven bless us.

Eddy Joel
+968 93215440
Subscribe at https://joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக