*பதில்* :
அநேகருக்கு இந்த கேள்வி உண்டு. மனதிலேயே போட்டுக் கொள்வார்கள்.
ஆதிமுதல் அந்தமும் அறிந்தவர் நம் தேவன். வெளி. 22:13.
கருவில் உருவாவதற்கு முன்னமே நம்மை தேவன் அறிந்தார் என்று சொல்கிறது வேதம். சங். 139:16.
பெயர் சொல்லி அழைத்தார் என்று சொல்கிறது. ஏசா. 45:4
*அப்படியென்றால் நாம் பரலோகம் போவதும் நரகம் போவதும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவையா*? இப்படிப்பட்ட கேள்விகளும் நமக்குள் எழும்பத்தான் செய்கிறது.
*உண்டானவை அனைத்தும் மாறாமல் இருந்ததா*?
ஆதி. 6:5-7 மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.
மேலே குறிப்பிட்ட வசனத்தை பார்க்கும்போது தேவனுடைய படைப்புகள் தங்கள் முறைகளை மீறினபோது தேவன் அவர்களுக்காக வைத்திருந்த வாழ்க்கையை மாற்றினார்.
பாவமானது பிசாசின் மூலம் வருகிறது. தேவனை மனுஷன் தேடாமல் பாவத்தை அவனுக்கு வைக்கப்பட்ட ஆசீர்வாதத்தை இழந்து போகிறான்.
யாக். 1:13-15 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
எரே. 19:5 தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிக்கும்படி பாகாலின் மேடைகளைக் கட்டினபடியினாலும் இப்படி வரப்பண்ணுவேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை, சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை.
நம்முடைய இரட்சிப்புக்காக நாம் பிரயாசப்படவேண்டும். (பிலி. 2:12 ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.)
தேவன் சகலவற்றையும் தீரமானிக்கிறவராய் இருந்தால் ஏதேன் தோட்டத்தில் ஜீவ விருட்சத்தின் கனியை மாத்திரம் படைத்து இருப்பார். நன்மை தீமை அறியும் கனியை படைத்து இருக்க அவசியமில்லையே !
ஒரு மெஷின் போல தன்னை மனுஷன் பின்பற்றாமல்;
தேவனை புரிந்து, உணர்ந்து, அவரை முழு மனதோடு பின்பற்ற வேண்டும் என்றே விரும்புகிறார். உபா. 13:3
ஆகவே, நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வதும், அதை இழந்து போவதும் மனுஷன் கையில் இருக்கிறது. செப். 2:3, ஆமோஸ் 5:6
இடுக்கமான வாசலைத் தேடி உண்மையைப் பற்றிக்கொண்டு நித்திய ஜீவனைப் பெறுவதும், உலகத்துடன் உறவாடி வேதத்தை மறந்து நித்திய அழிவைப் பெறுவதும் மனிதன் கையிலேயே உள்ளது. மத். 7:14
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக