சனி, 30 மார்ச், 2019

கேள்வி: கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தது மனுஷனுடைய சூழ்ச்சியினாலே என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள். அவர் சிலுவையில் அறையப்படுவது தேவனுடைய திட்டம் தானே.

*கேள்வி:* கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தது மனுஷனுடைய சூழ்ச்சியினாலே என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள். அவர் சிலுவையில் அறையப்படுவது தேவனுடைய திட்டம் தானே?

*பதில்* : அருமை சகோதரன் அவர்களுக்கு தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.

1-
நம் எல்லாருடைய பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்து இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்தெழு வேண்டும் என்பது தேவனுடைய அநாதி திட்டம் (ஏசா 53:9-12) அப்படிப்பட்ட உன்னதமான  பலியின் மூலம் தேவன் நம்மை மீட்டு எடுக்க சித்தம் கொண்டு நம்மீது அன்பு கூர்ந்தார் (யோ3:16)

கிறிஸ்து சிலுவையில் மரித்தது தேவனுடைய அநாதி தீர்மானம். சிலுவையில் தொங்கிகொண்டு இருந்த போது அவர் சொன்ன முதல் வார்த்தை – பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்றார்.

இந்த நாளில் நான் எழுதிய கருத்து – மனிதர்களை பற்றியது.
சிலுவையின் சம்பவத்தை மறுபக்கத்தில் பார்க்கும் போது – பரிசேயர்களும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் நியாயபிரமானிகளும், தங்களுடைய பதவி பறிபோய்விடக்கூடாது என்று இயேசு கிறிஸ்துவை எப்படியாவது கொலை செய்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். ஆதார வசனங்கள் கீழே :
Mat. 27:17 பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து,
Mat. 27:22 பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள்.

Mar. 14:55 அப்பொழுது பிரதான ஆசாரியரும் ஆலோசனைசங்கத்தாரனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகச் சாட்சி தேடினார்கள்; அகப்படவில்லை.

Mat. 26:59 பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்;
Mat 26:60 ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை;….

John 19:7 யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் சாகவேண்டும் என்றார்கள்.

Acts 13:28 மரணத்திற்கு ஏதுவானதொன்றும் அவரிடத்தில் காணாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள்.

2-
யூதாஸ் காரியோத்து நரகத்திலிருப்பார் அல்லது தேவனுடைய திட்டத்தை செயல் படுத்தியதற்காக அவர் பரலோகத்தில் இருப்பார் என்று யாரும் நியாயந்தீர்க்க முடியாது. ஆனால் கீழ்கண்ட சில வசனங்கள் நமக்கு சில தகவல்களை தெரிவிக்கிறது :

Mat. 26:24 மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.

Mat. 27:3 அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக்கொண்டுவந்து:
Mat. 27:4 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.

கிறிஸ்துவை காட்டிக்கொடுப்பதற்காக யூதாசுக்குள் பிசாசு புகுந்தான்  !!
John 13:2 சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்;

அருமையான இந்த கேள்விக்காய் நன்றி – இதன் மூலம் மற்ற அநேகரும் பயன்பெறுவர்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/BbygVjLN3mr2yki8IstAsg

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக