சனி, 30 மார்ச், 2019

#78 நியாயத்தீர்ப்பு பற்றிய விளக்கம் தேவை:

#78 - *நியாயத்தீர்ப்பு பற்றிய விளக்கம் தேவை -  பாதாளத்தில் ஏற்கனவே வேதனைப்படும் ஐஸ்வரியானைப் பார்க்கிறோமே? அப்படியென்றால் மரித்தவுடன் நியாயத்தீர்ப்பு நடந்து விடுகிறதா?*

1- கிறிஸ்து இப்பொழுது வருவாரென்றால் முன் மரித்தவர்களுக்கு நியாயத்தீர்ப்பு உண்டா?

2- ஏனெனில் ஐசுவரியவான் - லாசரு உதாரணத்தின்படி இறந்தவுடன் பாதாளத்திலே இரண்டு பிரிவுக்கு போகும்போதே நியாயம் தீற்கப்பட்டாயிற்றே அப்புறம் எதுக்கு நியாயத்தீர்ப்பு? அப்படியென்றால் மரித்தவுடன் நியாயத்தீர்ப்பு நடந்து விடுகிறதா?

*பதில்*:  இந்த கேள்வியை கேட்டதற்காக நன்றி.
கிறிஸ்துவுக்கு முன்னர் மரித்தவர்களுக்கு நியாயதீர்ப்பானது 2 வகைப்படுகிறதை வேதத்தில் பார்க்கமுடிகிறது.

*முதல் சாரார்* – மோசேயின் நியாயப்பிரமாணம் பெற்றவர்கள் (இஸ்ரவேலர்கள்). இவர்களை கிறிஸ்து: நியாயபிரமாணத்தின் படி நியாயந்தீர்ப்பார் (ரோ. 2:12, வெளி. 20:12)

*இரண்டாம் சாரார்* - நியாயப்பிரமாணம் இல்லாதவர்கள் (கிறிஸ்துவுக்கு முன்னர் இருந்த புறஜாதியார்)

இவர்கள் எங்களுக்கு உண்மையான கடவுளை தெரியாது என்று சொல்ல இடமில்லை என்று வேதம் சொல்கிறது. (ரோ. 2:15)

ஏனென்றால் நியாயபிரமாணமானது – பாவத்தை வகையறுத்ததேயன்றி பாவத்தை நிலைநிறுத்தவில்லை. நியாயபிரமாணம் இல்லாத காலத்திலும் தவறு என்பது தவறாக தான் இருந்தது. (வாசிக்கவும் ரோ. 7:7-11)

தேவனுடைய சாயலாக, அவருடைய சந்ததியாக, அவருடைய நீதியை இருதயத்தில் தாங்கி நாம் படைக்கப்பட்டோம் (பிர. 3:11)

இதன் அடிபடையில் புறஜாதியினரிடத்திலும் தேவ ஜனங்கள் பரிசுத்தமாய் வாழ்ந்தவர்களை பார்க்கமுடிகிறது.

மெல்கிசேதேக், ஆபிரகாம், நோவா, நினிவே பட்டணத்தார், தமார், ராகாப், ரூத், பத்சேபாள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்..

கிறிஸ்துவிற்கு பின் – நியாயபிரமாணம் நிறைவுற்றபடியால், இப்போது யூதர்களுக்கும் கிறிஸ்துவின் பிரமானமே நடைமுறையில் உள்ளது !!
கி.பி யில் வாழும் கிறிஸ்தவரல்லாதவர் அனைவருமே கிறிஸ்துவின் பிரமாணத்தின்படி நியாயந்தீர்க்கப்படுவர் – இஸ்ரவேலர் உட்பட !! 2தெச. 2:12; 1:7-8

*உங்கள் கேள்வியின் 2ம் பாகம்*:
ஐசுவரியவான் - லாசரு உதாரணத்தின்படி இறந்தவுடன் பாதாளத்திலே இரண்டு பிரிவுக்கு போகும்போதே நியாயம் தீற்கப்பட்டாயிற்றே அப்புறம் எதுக்கு நியாயத்தீர்ப்பு?  அப்படியென்றால் மரித்தவுடன் நியாயத்தீர்ப்பு நடந்து விடுகிறதா?

தற்காலத்தில் நாம் பார்க்கும் கோர்ட் சீன் போல அப்போது நியாயதீர்ப்பின் நாளில் நடக்கும் என்று சொல்வதற்கில்லை... காரணம் ஜீவித்திருக்கும் காலத்திலேயே – கிறிஸ்துவை ஏற்று அவர் கட்டளையின்படி நடக்கிறவர்களுக்கு பரலோகமா நரகமா என்பதை மரணத்திலேயே தீர்மானிக்கபட்டுவிட்டதை லாசரு – ஐஸ்வரியவான் சம்பவத்தில் நாம் காணமுடிகிறது.

கிறிஸ்துவின் நியாயதீர்ப்பின் நாளில் நாம் அனைவரும் அவருக்கு முன்பாக நிறுத்தப்பட்டு அவரவர் போகவேண்டிய இடத்திற்கு அனுப்பப்படுவோம் (மத். 25:31-46)

அப்போது நாம் வாதாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாது !! தீர்ப்பு மாத்திரமே (எபி. 4:13)

மரணத்திற்கு பின் – தேவ ஜனங்களுக்கு கொடுக்கப்படுகிற ஒரு இளைப்பாறும் நேரம் / இடம் தான் – பரதீசு.
மற்றவர்களுக்கு – பாதாளம்..

நியாயதீர்ப்பிற்கு பின் – பரதீசுவில் உள்ளவர்கள் – பரலோகம் போவோம்.
பாதாளத்தில் உள்ளவர்கள் – நரகம் செல்வர்.

மரித்த அனைவருக்கும் / கிறிஸ்து வரும்போது உயிரோடு இருக்கும் அனைவருக்கும் புதிய அழியாத சரீரம் கொடுக்கப்படும் – பின்பு அந்த சரீரத்தில் தான் நித்திய வாழ்வும் / அழிவும் 1 கொரி. 15:52-54, மத். 25:46

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229    
 
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக