செவ்வாய், 29 ஜனவரி, 2019

கேள்வி: ஏன் கிறிஸ்து முப்பதாவது வயதில் ஞானஸ்நானம் எடுத்தார்?

இவர் கேட்ட 2வது கேள்வி:
2- ஏன் கிறிஸ்து முப்பதாவது வயதில் ஞானஸ்நானம் எடுத்தார் என்று கேட்டீர்கள்?

ஞானஸ்நானம் எடுப்பதற்கு வயது வரம்பு எதுவும் வேதத்தில் இல்லை.

என் வியூகம் : இயேசுகிறிஸ்து வாழ்ந்தது நியாயப்பிரமாண காலம். நியாயபிரமாண முறைப்படி 30-50 வயது உள்ளவர்களை ஆசரிப்புக் கூடார வேலைக்கு அமர்த்தும் கட்டளை தேவனால் இருந்தது.

எண் 4:1-4  கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: லேவியின் புத்திரருக்குள்ளே இருக்கிற கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில், ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகையிடுவாயாக. ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்குரியது.

கிறிஸ்துவானவர் சகல நியாயபிரமாணத்தையும் நிறைவேற்றினவர் என்று நாம் பார்க்கிறோம். 


இந்த பதில்களை படிப்பவர்களுக்கு அதிகம் உதவியாய் இருக்கும் படி கேள்வி கேட்ட உங்களுக்கு என் பாராட்டுக்கள் !!

என் சொந்த கருத்துக்கள் அல்ல – காலாவதியான வசனங்களையும் அல்ல – நடைமுறையில் இருக்கும் சகல ஆதார வசனங்களைக் கொண்டு பதில் எழுதியிருக்கிறேன் – பொறுமையாய் வாசித்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

Eddy Joel, M.Th., Ph.D.,
Preacher & World Bible School Teacher,
Kaniyakulam Church of Christ
+91 8144 77 6229


-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
1-தாவீதின் சிங்காசனத்தை தேவன் கொடுத்தாரா என்று கேட்டீர்கள்?



Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக