#56 *கேள்வி* : தாவீதின் சிங்காசனத்தை தேவன் கொடுத்தாரா என்று கேட்டீர்கள்?
*பதில்* : எனதருமை சகோதரரே, அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த கேள்விகளை பலரிடம் கேட்டிருப்பீர்கள் என்று தோன்றுகிறது. பதில் தெரிந்து- புரிந்து கொள்ளும் ஆர்வமும் இருக்கும் என்று நம்புகிறேன். மிக பொருமையாய் வரிக்கு வரி கவனத்தோடு படிக்கவும். தெரிந்த வசனம் தானே என்று வேகமாக கடந்து போகவேண்டாம். முழுவதும் படித்தபின் உங்களுக்கு தெளிவு வரும் என்று நம்புகிறேம்
வேதத்தில் - எந்த வசனத்தை படித்தாலும், நாம் “பகுத்துப்படிக்க” மறந்து விடகூடாது.
1- *முன்னோர்களின் காலம்* (ஆதாம் துவங்கி மோசேயின் கையில் நியாயப்பிரமாணம் கொடுப்பது வரை – தேவன் மனிதரிடம் நேரிடையாக பேசி வந்த காலம்)
2- *மோசேயின் காலம்* (நியாயபிரமாணம் மற்றும் தீர்க்கதரிசிகளின் மூலம் பேசின காலம்)
3- *கிறிஸ்துவின் காலம்* (நியாயபிரமானத்தை நிறைவேற்றி புதிய பிரமாணத்தில் நாம் வாழும் காலம்) என்று மூன்று காலங்கள் உள்ளது.
காலத்ததை உணர்ந்து, யார் யாருக்கு எழுதியது என்பதை உணர்ந்து நாம் படிக்கும் போது எந்த கேள்விக்கும் சரியான விடையை நாம் அறிந்து கொள்ள முடியும்.
உன்னதமான தேவன், நாம் குழம்பி கொள்ளும் படி தன் கட்டளையை கொடுப்பாரோ?
1-*தாவீதின் சிங்காசனத்தை தேவன் கொடுத்தாரா என்று கேட்டீர்கள்*?
சிங்காசனம் என்பது அதிகாரத்தை குறிக்கிறது. தாவீதின் சிங்காசனம் என்பது இஸ்ரவேலரை ஆளும் அதிகாரத்தை குறிக்கிறது.
பிதாவானவர் தன் குமாரனான இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பின போது இயேசுவானவர் (மத் 15:24) காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்லவென்றார்.
மேலும் (மத் 10:5-6) பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள் என்றார்.
*உயிர்தெழுந்தபின்போ* – இஸ்ரவேலர்களுக்கு மாத்திரம் என்று இருந்த அந்த குறுகிய வட்டமானது *உலகமனைத்திற்கும்* கொடுக்கப்பட்டது.
வசனத்தை கவனிக்கவும் மத் 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: *வானத்திலும் பூமியிலும்* சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
யோ 3:35-36 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
அப் 2:30-36 அவன் (தாவீதை குறிக்கிறது) தீர்க்கதரிசியாயிருந்து: *உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை ஏழும்பப்பண்ணுவேன்* என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால், அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். இந்த இயேசுவை தேவன் ஏழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும், நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான். ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த *இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று* இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
*தாவீதின் சிங்காசனத்தை தேவன் கொடுத்தாரா என்று கேட்டீர்கள். – நீங்கள் கேட்ட கேள்வியின் பதில் மேலே கூறிய வசனங்கள் தெள்ளத்தெளிவாய் வசனங்கள் இருப்பதை கவனித்து இருப்பீர்கள்*.
ஆம், தேவன் தன் குமாரனாகிய இயேசுவை கிறிஸ்துவாக்கினது மாத்திரமல்ல முழு உலகத்தையும் நியாயம் தீர்க்கும் அதிகாரத்தையும் கொடுத்து சர்வ அதிகாரமான சிங்காசனத்தை கொடுத்திருக்கிறார் !!
இந்த பதில்களை படிப்பவர்களுக்கு அதிகம் உதவியாய் இருக்கும் படி கேள்வி கேட்ட உங்களுக்கு என் பாராட்டுக்கள் !!
என் சொந்த கருத்துக்கள் அல்ல – காலாவதியான வசனங்களையும் அல்ல – நடைமுறையில் இருக்கும் சகல ஆதார வசனங்களைக் கொண்டு பதில் எழுதியிருக்கிறேன் – பொறுமையாய் வாசித்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/BbygVjLN3mr2yki8IstAsg
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக