திங்கள், 17 டிசம்பர், 2018

Daily Dose 17-12-18

நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

பழைய ஆகாரமோ, கொஞ்சம் கெட்டு போனதோ, சரியாய் சமைக்காததோ, சுத்தமற்றதோ – இப்படி எந்த வகையான ஆகாரத்தையும் ஒரு தாயானவள் சிறிய பிள்ளைகளுக்கு கொடுக்கவே மாட்டாள்.

ஆகாரம் கொடுக்கும் பத்திரத்தையும், உடுத்தும் துணியையும், படுக்கை விரிப்பையும் பார்த்து பார்த்து, சுடு தண்ணீரில் துவைத்து, மிக கவனமாய் குழந்தைக்கு சேவை செய்வாள்... இதில் கொஞ்சம் மாறுபட்டாலும் – குழந்தைக்கு சுக வீனம் வந்துவிடும். அது, குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது.

அப்போஸ்தலர் பேதுரு நமக்கு கொடுக்கும் ஆலோசனையும் அதை நினைவு படுத்துகிறது.

பழையவை (ஏற்பாடு), பழையதும் புதியதும் (கட்டளைகள்) கலந்தவை, சொந்த அனுபவம் மற்றும் வரலாறுகள், சினிமாவையும் அரசியல் மேடை பேச்சுகளையும் மிஞ்சத்தக்க உணர்ச்சிமிக்க செய்திகள் என்று பரிமாறப்படும் எதுவும் நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ச்சியை கொடுக்காது என்று அறிந்து, களங்கமில்லாத ஞானப்பாலில் வளருவோம். (1பேதுரு 2:2-3)

நம் கிறிஸ்தவ வளர்ச்சிக்கு – வேத வாசிப்பு இன்றியமையாதது. குறைந்தது 10 நிமிடமாகிலும் வாசிக்க தீர்மானியுங்கள். தேவன் உங்களை நடத்துவதை உணருவீர்கள்.

*Eddy Joel*

Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available.

Grace to you and peace from God our Father and the Lord Jesus Christ.


A mother will never feed the Old food, slightly defiled, improper cooked food to a child.

She cleans the vessel, cloth and all the belongings with hot water before serving to babies. Slight error will result in yielding disease to the baby, which is dangerous to the life as well.

This reminds us of Apostle Peter’s instruction.

Neither Old stuff (OT), mixure of OT & NT policies, improper preparation, personal experiences & their history, listening to sensational and emotional messages which are even better than cinema/ political stage speaches will help us to improvise the Christian faith, Let us be full of desire for the true milk of the word so that we may go on to salvation; (1 Pet 2:2-3)

Bible reading is evident and mandatory for Christian growth. Atleast allocate 10 minutes to read Bible daily. You will understand the guidance of our Lord.

*Eddy Joel*

Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available.

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக